Posts

Showing posts from June, 2018

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம் மிகவும் #பயன்உள்ளதகவல்#

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம் மிகவும் #பயன்உள்ளதகவல் 1. ஒரு 30 வினாடிகள்... இரு காது துவாரங்களையும் விரல்களால் அடைத்துக்கொள்ளுங்கள்... நின்று போகும் தீராத விக்கல்! 2. ஒரே ஒரு சிறு கரண்டி அளவுக்கு சர்க்கரையைவாயில் போட்டு சுவையுங்கள்.. பறந்து போகும் விக்கல்! 3. கொட்டாவியை நிறுத்த... கொட்டாவி வருவதற்கான காரணம்: Oxygen பற்றாக்குறை தான்.. அதனால்... ஒரு நான்கு அல்லது ஐந்து தடவை, நன்கு மூச்சை இழுத்து விடுங்கள்... கொட்டாவி போய், நன்கு சுறுசுறுப்பாகி விடுவீர்கள்! 5. உடல் துர் நாற்றத்தைப்போக்க... குளிக்கும் போது  நீங்கள் குளிக்கும் தண்ணீரில் ஒரே ஒரு தக்காளிப் பழத்தின் சாற்றினை கலந்து பிறகு குளிக்கவும்... அவ்வளவு தான்... நாள் முழுக்க புத்துணர்வுடன் திகழ்வீர்கள்! 6. வாய் துர்நாற்றத்தால் சங்கடமா? எலுமிச்சை சாற்றில் சிறிது உப்பு  சேர்த்து குடித்து வந்தாலும், வாயைக் கொப்பளித்து வந்தாலும் வாய் துர்நாற்றம் நீங்கும். 7. தலைமுடி வயிற்றுக்குள் போய் விட்டதா? வாழைப்பழத்தினுள் அல்லது வெற்றிலையில் ஒரு நெல்லை வைத்து

மிக்ஸர்

Image
மிக்ஸர் தேவையான பொருட்கள்: பூந்தி — அரை கிலோ ஓமப்பொடி — அரை கிலோ முந்திரி — 100 கிராம் பட்டாணி — 100 கிராம் நிலக்கடலை — 100 கிராம் நெய் — நான்கு தேகரண்டி காய்ந்த மிளகாய் — பத்து கொப்பரைத் தேங்காய் துண்டுகள் — 100 கிராம் அவல் — 100 கிராம் செய்முறை: பூந்தி, ஓமப்பொடி இரண்டையும் நன்றாகக் கலக்கவும். கடாயில் நெய் விட்டு கொப்பரை துண்டுகள், அவல் சேர்த்து பொரித்து எடுக்கவும். இன்னொரு கடாயில் நெய் ஊற்றி, முந்திரி, பட்டாணி, நிலக்கடலை சேர்த்து வறுத்து எடுக்கவும். காய்ந்த மிளகாயை எண்ணையில் வறுத்து நறநறவென பொடி செய்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் ஓமப்பொடி, பூந்தி கலவை, வறுத்த முந்திரி, பட்டாணி, நிலக்கடலை, கொப்பரை துண்டுகள், அவல், பொடி செய்த காய்ந்த மிளகாய், நெய் ஊற்றி நன்றாக கலக்கவும். சுவையான மிக்ஸர் ரெடி. தேவையான பொருட்கள்: பூந்தி — அரை கிலோ ஓமப்பொடி — அரை கிலோ முந்திரி — 100 கிராம் பட்டாணி — 100 கிராம் நிலக்கடலை — 100 கிராம் நெய் — நான்கு தேகரண்டி காய்ந்த மிளகாய் — பத்து கொப்பரைத் தேங்காய் துண்டுகள் — 100 கிராம் அவல் — 100 கிராம் செய்முறை: பூந்தி, ஓமப்பொடி

திருநெல்வேலி அல்வா வரலாறு..!!

Image
திருநெல்வேலி அல்வா வரலாறு..!! திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சொக்கம்பட்டி ஜமீன்தார் புனித யாத்திரையாக வட இந்திய புண்ணியத் தலங்களுக்குச் சென்றிருக்கிறார். அங்கு தயாரிக்கப்பட்ட அல்வாவை வாங்கிச் சாப்பிட்டிருக்கிறார். அந்தச் சுவையில்  மயங்கிய அவர் அந்த அல்வா தயாரித்தவரையே திருநெல்வேலிக்கு அழைத்து வந்திருக்கிறார். அவர் மூலம் திருநெல்வேலியில் அல்வா தயாரிப்பு துவங்கி இன்று அல்வா என்றாலே திருநெல்வேலி என்றாகி விட்டது என்று சிலர் சொல்கிறார்கள்.. வட இந்தியாவிலிருந்து வணிகத்திற்காக தமிழகத்தின் தென்பகுதிக்கு வந்த ஒரு குடும்பத்தினர் திருநெல்வேலியில் அவர்கள் ஊரின் அல்வாவைத் தயாரித்திருக்கிறார்கள். தாமிரபரணித் தண்ணீரின் சேர்க்கையால் அந்த அல்வா அவர்களின் ஊரில் செய்த அல்வாவை விட மிகவும் ருசியாக இருந்திருக்கிறது.இந்த சுவையான திண்பண்டத்தை இந்த ஊரிலேயே தயாரித்து விற்பனை செய்தால் என்னவென்று அல்வாக் கடையைத் துவங்கி இருக்கிறார்கள் அன்றிலிருந்து அல்வா திருநெல்வேலியில் ஒன்றாகி விட்டது என மற்றும் சிலர் சொல்கிறார்கள்.. எது எப்படியோ இன்று திருநெல்வேலி என்றாலே நாக்கில் எச்சில் ஊற வைக்கும் அல்வா ஞாபகத்திற்

உடல்_பருமனை_குறைக்கும்_இஞ்சி

Image
#உடல்_பருமனை_குறைக்கும்_இஞ்சி... உடல் பருமனாக உள்ளதே என்று நீங்கள் கவலைப்பட்டால், அந்தக் கவலை இனி உங்களுக்கு வேண்டாம். இஞ்சி பிரியர் ஆக நீங்கள் இருந்தால், இந்த கவலை உங்களுக்கு இல்லை. இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட, வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும். இஞ்சி துவையல், பச்சடி செய்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும். இஞ்சி சாற்றில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும். இஞ்சி பயன்படுத்தும் முறை... இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும். இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும். இஞ்சியை சுட்டு உடம்பில் தோய்த்து சாப்பிட பித்த, கப நோய்கள் தீரும். இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.  இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீர ணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும். இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம் இரைச்சல் தீரும். காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று,

Green chilli chutney

Image
Green chilli chutney  First let's get a good spicy green chilli. If the chilli is caught, the net will come. Do not come to the scrub, do not come. Do not get a good kiss next to China. Next take the stone salt or rock salt. Few of the water in the water is hard to scream. Leave the oil in a pan and add 24 green chillies to the knife (otherwise it will burst) and cut it off with two large walnuts and cut it off half the boil and cover the oven. Grind the green onion in a mixture and grind it well. Check the salt in the middle and then add lemon juice and grind it to the right tart (if you add tamarind to the green chilli carrot, otherwise the leaf will spoil the flavor.) Then add the mustard sauce to the lentils and add it to any of the ingredients. Then eat and drink with the measure of the consequence. 🥗 mama cooking 🥗

கம்பு புட்டு

Image
கம்பு புட்டு தேவையான பொருட்கள் கம்பு – ஒரு கப் உப்பு – தேவைகேற்ப நெய் – ஒரு தேகரண்டி ஏலக்காய் தூள் – அரை டீஸ்பூன் சர்க்கரை – தேவைகேற்ப தேங்காய் துருவல் – கால் கப் முந்திரி – ஒரு டீஸ்பூன் திராட்சை – ஒரு டீஸ்பூன் பிஸ்தா – ஒரு டீஸ்பூன் செய்முறை கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி, திராட்சை, பிஸ்தா போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து கொள்ளவும். ஒரு கிண்ணத்தில் கம்பு மாவு, உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். பிறகு, அதில் தண்ணீர் தெளித்து உதிரி உதிரியாக பிசைந்து கொள்ளவும். பிறகு, இட்லி பாத்திரத்தில் வைத்து பத்து நிமிடம் ஆவி கட்டவும். பின், எடுத்து  ஒரு கிண்ணத்தில் போட்டு உதிர்த்து  கொள்ளவும். பிறகு, அதில் ஏலக்காய் தூள், நெய் சிறிதளவு, தேங்காய் துருவல், சர்க்கரை, நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை, பிஸ்தா ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.

வயதானவர்களுக்கு சத்தான சாமை, வரகு அடை

வயதானவர்களுக்கு சத்தான சாமை, வரகு அடை  சிறுதானியங்களில் சாமை, வரகு மிகவும் சத்து நிறைந்தது. இவை இரண்டையும் வைத்து சத்தான அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம். #தேவையான #பொருட்கள் : சாமை (Kodo Millet) அரிசி - 1/2 கப் வரகு (Little Millet) அரிசி - 1/2 கப் பச்சரிசி - 1/2 கப் துவரம் பருப்பு - 3/4 கப் கடலை பருப்பு - 1/4 கப் வெந்தயம் - 2 டீஸ்பூன் சீரகம் - 2 டீஸ்பூன் மிளகு - 2 ஸ்பூன் ப.மிளகாய் - 2 வெங்காயம் - 2 கறிவேப்பிலை - 1 கைபிடியளவு உப்பு, எண்ணெய் - தேவையான அளவு #தாளிக்க : கடுகு, உளுத்தம் பருப்பு - தேவையான அளவு. #செய்முறை : அரிசி வகைகளையும், பருப்பு வகைகளையும் ஒன்றாக கழுவி வெந்தயம் சேர்த்து 3 மணி நேரம் ஊற வைக்கவும். வெங்காயம், ப.மிளகாய், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும். மிக்ஸியில் சீரகம், மிளகு, உப்பு சேர்த்து எல்லாவற்றையும் தோசை மாவு பதத்திற்கு அரைக்கவும். ஒரு கடாயில், எண்ணெய் விட்டு சூடானதும், கடுகு, உளுந்தம் பருப்பு தாளித்து, வெங்காயம், ப.மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி மாவுடன் சேர்த்து கலந்து அரை மணி நேரம் அப்படியே வைக்கவும். தோச

சூப்பரான மில்க் அல்வா

Image
சூப்பரான மில்க் அல்வா தேவையான பொருட்கள்: பால் – 4 கப் சர்க்கரை – 2 கப் நெய் – 1 கப் ரவை – அரை கப் சீவிய பாதாம் – தேவையான அளவு மஞ்சள் கலர் – ஒரு சிட்டிகை செய்முறை: சிறிய கடாயில் ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றி, சீவிய பாதாமை லேசாக வறுத்து வைத்துக்கொள்ளுங்கள். . ஒரு பாத்திரத்தில் பால், சர்க்கரை, ரவை அரை கப் நெய், மஞ்சள் கலர் சேர்த்து நன்றாக கலந்து, கொள்ளவும். . இதை அடிகனமான பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து கைவிடாமல் கிளறுங்கள். அடிக்கடி நெய் சேர்த்துக்கொண்டே இருக்க வேண்டும். . இந்தக் கலவை சற்று சேர்ந்து வரும்போது, நெய் பிரியும். அப்போது தீயைக் குறைத்து, கலவை நன்கு சுருண்டு வரும்வரை விடாமல் கிளறி… கடைசியில், வறுத்து வைத்திருக்கும் பாதாமை சேர்த்துக் கிளறி இறக்குங்கள். . இதைத் தட்டில் பரப்பி, வில்லை களாகவும் போடலாம். ஸ்பூனில் எடுத்தும் பரிமாறலாம். . சூப்பரான மில்க் அல்வா ரெடி. . குறிப்பு: ஒரு கப் அளவு என்பது 200மிலி அல்லது 200 கிராம் அளவைக் குறிக்கும்

ஆந்திரா தயிர் சாதம்

Image
ஆந்திரா தயிர் சாதம் சமையல் கலை சுப்பையா நாயுடு வின் ஸ்பெசல் தயிர் சாதம். இந்த தயிர் சாதம் இன்றும் சென்னை வேளச்சேரி புகழ் சிக்கன் அன் ரோஷ்ட் உணவகத்தில் இன்றும் கிடைக்கும். தேவையான பொருட்கள்: தயிர் - ஒரு மேசைக்கரண்டி பால் - ஒன்றரை கப் அரிசி - ஒரு கப் தண்ணீர் - ஒன்றரை கப் மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி கடுகு - 1/2 தேக்கரண்டி சீரகம் - 1/2 தேக்கரண்டி மிளகு - 1/2 தேக்கரண்டி பெரிய வெங்காயம் - ஒன்று வரமிளகாய் - 4 இஞ்சி துருவியது - 1/2 தேக்கரண்டி கொத்தமல்லி - ஒரு மேசைக்கரண்டி கறிவேப்பிலை - 5 இலை வெண்ணெய் - ஒரு தேக்கரண்டி பெருங்காயம் - ஒரு சிட்டிகை மரசெக்கு கடலெண்ணய் - 2 தேக்கரண்டி உப்பு - ஒரு தேக்கரண்டி செய்முறை 1.அரிசியை ஒன்றரை கப் பால் மற்றும் ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி குக்கரில் வேகவைத்து எடுத்து ஆற வைத்து கொள்ளவும். 2. ஒரு வடச்சட்டியில் மரசெக்கு கடலெண்ணய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், பெருங்காயம் மற்றும் மிளகு போட்டு கடுகு வெடித்ததும் கறிவேப்பிலை, இஞ்சி, வர மிளகாய், மஞ்சள் தூள் மற்றும் வெங்காயம் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். 3.பிறகு வேகவைத்து எடுத்து வைத்

மாங்காய் பச்சடி

Image
மாங்காய் பச்சடி தேவையான பொருட்கள் மாங்காய் - 1 . தோல் நீக்கி chips சீவும் பலகையில் சீவி எடுத்து கொள்ளவும் . வெல்லம் - சிறிதளவு .உங்கள் சுவைகேர்ப்ப . உப்பு - ஒரு பின்ச் மஞ்சள் பொடி - 1/4 ஸ்பூன் தாளிக்க : கடுகு - சிறிதளவு வரமிளகாய் - 1 முழுதாக தாளிக்கவும் எண்ணெய் - 1 ஸ்பூன் . செய்முறை : கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்த பொருட்கள் போட்டு தாளித்து சீவிய மாங்காய் சேர்த்து வதக்கவும் .கூட ஒரு pinch உப்பு , மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும் . சிறுது வதங்கியவுடன் கால் க்ளாஸ் குறைவாய் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும் . மாங்காய் வெந்தவுடன் வெல்லம் சேர்த்து கொதிக்கவிடவும் .. வெல்லம் கரைந்து ஒரு 2-3 நிமிடம் கொதித்தால் போதும் .அடுப்பை அனைத்து விடவும் . இது பண்டிகை காலத்தில் அதுவும் குறிப்பாக தமிழ் வருட பிறப்பு அன்று செய்வார்கள் . இது சிறிது காரம் ,சிறுது புளிப்பு , இனிப்பு என்று சாப்பிட சுவையாக இருக்கும் ... 🥗அம்மா சமையல் 🥗

இஞ்சிப் பச்சடி

Image
இஞ்சிப் பச்சடி தேவை : தோல் சீவி, பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு கப் பச்சை மிளகாய் - 7 (பொடியாக நறுக்கவும்) புளி - எலுமிச்சை அளவு வெந்தயப்பொடி, பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் - தலா கால் டீஸ்பூன் வெல்லம் - ஒன்றரை டேபிள்ஸ்பூன் கடுகு - அரை டீஸ்பூன் காய்ந்த மிளகாய் - 2 கறிவேப்பிலை - சிறிதளவு எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன் உப்பு - தேவையான அளவு. செய்முறை : புளியைத் தண்ணீரில் ஊறவைத்துக் கரைத்து வடிகட்டவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும். அதனுடன் இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு புளிக்கரைசல், பெருங்காயத் தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். இதில் வெந்தயப்பொடி, வெல்லம் சேர்த்துக் கொதிக்கவிட்டு எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும். 🥗அம்மா சமையல் 🥗

மாங்காய் (மீன்) குழம்பு

Image
மாங்காய் (மீன்) குழம்பு மாங்காய் - ஒன்று புளி - ஒரு எலுமிச்சம் பழ அளவு தக்காளி - ஒன்று வறுத்து அரைக்க தேவையானவை : வரமிளகாய் - 5 மல்லி விதை - 4 தேக்கரண்டி மிளகு - கால் தேக்கரண்டி சீரகம் - அரை தேக்கரண்டி வெந்தயம் - கால் தேக்கரண்டி சின்ன வெங்காயம் - 6 கறிவேப்பிலை - ஒரு கொத்து தேங்காய் துருவல் - அரை கப் தாளிக்க : கடுகு - ஒரு தேக்கரண்டி உளுத்தம்பருப்பு - அரை தேக்கரண்டி சீரகம் - அரை தேக்கரண்டி வெந்தயம் - கால் தேக்கரண்டி கறிவடகம் - ஒரு தேக்கரண்டி சின்ன வெங்காயம் - 10 கறிவேப்பிலை - தேவையான அளவு செய்யும் முறை ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் 5 தேக்கரண்டி ஊற்றி தாளிப்பு சாமான்களை போட்டு தாளித்து தக்காளியையும் சேர்த்து வதக்கி, அரைத்த மசாலாவை போடவும். புளியை கரைத்து ஊற்றவும். நறுக்கிய மாங்காயை போட்டு உப்பு சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து கொதிக்க விட்டு எண்ணெய் தெளிந்ததும் இறக்கவும். 🥗அம்மா சமையல் 🥗

சேமியா வெஜிடபிள் பிரியாணி

Image
சேமியா வெஜிடபிள் பிரியாணி தேவையானவை : சேமியா - 200 கிராம் கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி, உருளைக்கிழங்கு, காலிஃப்ளவர் கலவை - 150 கிராம் இஞ்சி-பூண்டு விழுது - 2 டீஸ்பூன் மீடியம் சைஸ் பெரிய வெங்காயம் - 1 (சற்றுபெரிய ஸ்லைஸ்களாக நறுக்கவும்) சிறிய‌ தக்காளி - 1 (பொடியாக நறுக்கவும்) பச்சை மிளகாய் - 3 (கீறி விடவும்) கறிவேப்பிலை - சிறிதளவு புதினா இலைகள் - சிறிதளவு கொத்தமல்லித்தழை - சிறிதளவு (பொடியாக நறுக்கவும்) மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை உப்பு - தேவையான அளவு எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன் சோம்பு - அரை டீஸ்பூன் பிரிஞ்சி இலை - 2 பட்டை - 1 கிராம்பு - 2 ஏலக்காய் - 2 செய்முறை: அடுப்பில் கடாயை வைத்து சில சொட்டு எண்ணெய் விட்டு சேமியா சேர்த்து கோல்டன் பிரவுன் நிறம் ஆகும் வரை வறுத்து தனியாக வைக்கவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து 5 கப் தண்ணீர், தேவையான அளவு உப்பு, சில துளிகள் எண்ணெய் சேர்த்துக் கொதிக்க விடவும். தண்ணீர் கொதிக்கும் போது சேமியாவைச் சேர்த்து மூன்று நிமிடம் வேக விடவும். வெந்ததும் தண்ணீரை வடித்து, ஒரு ப்ளேட்டில் சேர்த்து ஆற விடவும். காய்கறிகளை மைக்ரோவேவ் பவுலில் சேர

வாழைத்தண்டு - வேர்க்கடலை பொரியல்

Image
வாழைத்தண்டு - வேர்க்கடலை பொரியல் தேவையானவை : வாழைத்தண்டு -1, வேர்க்கடலை - 2 கைப்பிடி, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப் பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, பெருங்காயத் தூள் - கால் டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, கறிவேப்பிலை,தேங்காய் துருவல், மோர் - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: வாழைத்தண்டை பொடியாக நறுக்கி மோரில் போட்டுவைக்கவும். கடாயில் எண்ணெய்விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத் தூள், கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும். நறுக்கிய வாழைத்தண்டைப் போட்டு, மஞ்சள் தூள், உப்பு, வேர்க்கடலை சேர்த்துக் கிளறி மூடிவைக்கவும்.  நன்றாக வெந்ததும் தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும்.  பலன்கள்: கோடையில் சிறுநீரகத் தொற்று ஏற்படாமல் தடுக்கும். உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், தாது உப்புக்கள், புரதம் இருப்பதால் தசைகள் உறுதியாகும். நார்ச்சத்து, நீர்ச்சத்து இருப்பதால், நல்ல ஜீரண சக்தியைத் தரும். மலச்சிக்கல் வராமல் காக்கும். 🥗அம்மா சமையல் 🥗

மிளகுக் கஷாயம்

Image
மிளகுக் கஷாயம் தேவையானவை: மிளகு, சீரகம், தனியா (மல்லி) - தலா கால் கப் ஓமம் - 2 டேபிள்ஸ்பூன் நசுக்கிய சுக்கு, நசுக்கிய சித்தரத்தை - தலா 3 டேபிள்ஸ்பூன் பனங்கற்கண்டு - 2 டேபிள்ஸ்பூன் செய்முறை: வெறும் வாணலியில் மிளகு, சீரகம், தனியா(மல்லி), ஓமம், சுக்கு, சித்தரத்தை ஆகியவற்றை வறுத்து, 4 டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்கவிட்டு, அது இரண்டு டம்ளராக சுண்டியதும் இறக்கவும். இதனை வடிகட்டி, பனங்கற்கண்டு சேர்த்து அருந்தலாம். வடிகட்டியவற்றை தனியே எடுத்து வைத்து, அன்று மாலையே மீண்டும் 3 டம்ளர் நீர் விட்டு, அது ஒன்றரை டம்ளராக சுண்டியதும் இறக்கி வடிகட்டி பனங்கற்கண்டு சேர்த்து அருந்தலாம். தீர்வு: சித்தரத்தை, சளியை அறுத்து வெளியே கொண்டுவந்துவிடும். பனங்கற்கண்டு, இருமல் போக்கும். மிளகு, சீரகம், தனியா, ஓமம், பித்தத்தை அகற்றி, செரியாமையை நீக்கும் 🥗அம்மா சமையல் 🥗

சிக்கன் தோபியாசா

Image
சிக்கன் தோபியாசா தேவையான பொருட்கள்: சிக்கன் – 400 கிராம் வெங்காயம் – 2 (நீளமாக அரிந்தது) தக்காளி – ஒன்று சிறியது (பொடியாக நறுக்கியது) பச்சை மிளகாய் – ஒன்று மல்லி இலை – சிறிது மல்லிப் பொடி – 1 1/2 தேக்கரண்டி சீரகப்பொடி – அரை தேக்கரண்டி மஞ்சள் பொடி – அரை தேக்கரண்டி மிளகாய்ப் பொடி – 2 தேக்கரண்டி தயிர் – ஒரு மேசைக்கரண்டி உப்பு – தேவைக்கு ஏற்ப எண்ணெய் – தேவைக்கு ஏற்ப வெங்காயம் – 2 பட்டை – சிறிய துண்டு ஏலம் – 2 கிராம்பு – 2 இஞ்சி-பூண்டு விழுது – ஒரு தேக்கரண்டி செய்முறை: வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு பொரித்து எடுத்து வைக்கவும். அதே எண்ணெயில் அரைத்த விழுது மற்றும் எல்லாப் பொடிகளையும் ஒன்றன்பின் ஒன்றாகப் போட்டு வதக்கவும். பின்னர் அதில் தயிர், பச்சை மிளகாய், தக்காளி சேர்க்கவும். அவை நன்கு வதங்கியவுடன் கறியைச் சேர்த்து நன்கு வதக்கவும். கறி நன்கு வதங்கியவுடன் ஒரு கப் நீர் ஊற்றி நன்கு வேக விடவும். கறி வெந்தவுடன் பொரித்த வெங்காயம் போட்டுக் கிளறி, மல்லி இலை தூவி இறக்கவும். சிக்கன் தோபியாசா ரெடி. 🥗அம்மா சமையல் 🥗

தினை சந்தகை

Image
தினை  சந்தகை தேவையான பொருட்கள் தினை அரிசி - 150 கிராம் தேங்காய் - ஒரு மூடி (துருவியது) ஏலக்காய் - இரண்டு உப்பு - சிறிதளவு வெல்லம் - 50 கிராம் செய்முறை தினை அரிசியை இரண்டு மணி நேரம் ஊறவிடவும். அரிசியுடன் உப்பு சேர்த்து நன்கு மிருதுவாக கெட்டியாக அரைத்துக்கொள்ளவும். இந்த மாவை இட்லித் தட்டில் வைத்து வேகவிடவும். வெந்ததும், மாவை இடியாப்ப அச்சில் வைத்து இடியாப்பமாகப் பிழிந்து எடுத்தால், சந்தகை ரெடி. தேங்காயை பாகாக்கி, அதில் வெல்லம் ஏலக்காய் சேர்த்து சந்தகையோடு சாப்பிட சுவையாக இருக்கம். பலன்கள்: தினையில் பீட்டாகரோட்டின் அதிகம் என்பதால், கண் பார்வைக்கு உதவும். நார்ச்சத்தும் தேவையான அளவு இருக்கிறது. வெல்லமும் தேங்காய்ப்பால் சேர்வதால், இரும்புச் சத்து கிடைக்கும்! 🥗அம்மா சமையல் 🥗

சாமை கொழுக்கட்டை

Image
சாமை கொழுக்கட்டை தேவையான பொருட்கள் சாமை அரிசி மாவு - 150 கிராம் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் கடுகு - 1/2 டேபிள் ஸ்பூன் உளுந்து - 1 டேபிள் ஸ்பூன் கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் - இரண்டு கறிவேப்பிலை - 2 கொத்து முந்திரி - 1 டேபிள் ஸ்பூன் (உடைத்தது) உப்பு - தேவையான அளவு தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது) செய்முறை எண்ணெயைச் சூடாக்கி கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு, முந்திரி, மிளகாய், கறிவேப்பிலை, தேங்காய் சேர்த்து நன்கு வதக்கவும். அதனுடன் சிறிது நீர் சேர்த்து உப்பு கலந்து கொதிக்கவிடவும். நன்கு கொதித்தவுடன், அதில் சாமை அரிசி மாவைக் கொட்டி கட்டி இல்லாமல் கிளறவும். கையால் தொட்டால் ஒட்டாமல் வரும் வரை கிளறி வேகவிடவும். இந்தக் கலவையை ஆறவிட்டு கையால் கொழுக்கட்டைகளாகப் பிடித்து, ஆவியில் வேகவிடவும். புதினா அல்லது கொத்தமல்லிச் சட்னியுடன் பரிமாறலாம். பலன்கள்: நார்ச்சத்து அதிகம் இருக்கும் உணவு இது. தேங்காயில் இருக்கும் புரோட்டீன், குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு உதவும். மாலை நேர சிற்றுண்டியாகச் செய்து தரலாம். சட்னி சேர்ப்பதால், அதில் உள்ள சத்துக்களும் அதிகம் கிட

கறிவேப்பிலை ஊறுகாய்

Image
கறிவேப்பிலை ஊறுகாய் தேவையானவை:  கறிவேப்பிலை - 2 கப் (தண்ணீரில் அலசி, ஆய்ந்தது), காய்ந்த மிளகாய் - 10, புளி - நெல்லிக்காய் அளவு, கடுகு, பெருங்காயத்தூள் - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு  - தேவையான அளவு. செய்முறை: வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு கறிவேப்பிலையை வதக்கி இறக்கவும். (இலையில் நீர் இருக்கக்கூடாது). இதனுடன் பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய், புளி,உப்பு சேர்த்து வதக்கவும். அனைத் தையும் மிக்ஸியில் போட்டு நீருக்குப் பதில் புளித் தண்ணீர் விட்டு அரைத்து எடுக்கவும். 50 மில்லி எண்ணெயில் கடுகு தாளித்து இதன் மேல் ஊற்றிக் கலக்கவும் 🥗அம்மா சமையல் 🥗

பால்கோவா செய்வது எப்படி?

Image
பால்கோவா செய்வது எப்படி? பால்கோவா என்றதும் ஏதோ பெரிய விஷயம் என்று நினைக்காதீர்கள். மிகவும் எளிதானதும், ருசியானதும், உடலுக்கு ஏற்றதும் ஆகும். தேவையான பொருட்கள் பால் – 1 லிட்டர் தயிர் – சிறிதளவு சக்கரை – 100 கிராம் நெய் – 5 தேக்கரண்டி முந்திரி – 5 கிராம செய்யும் முறை வாய் அகண்ட இரும்பு வாணலியில் பாலை ஊற்றிக் காய்ச்சவும். ஒரு கொதி வந்ததும் சிறிது தயிரை பாலில் விடவும். பால் பொங்கி வரும்போது ஒரு கரண்டி வைத்து பாலை நன்கு கிளறிக் கொண்டே இருக்கவும். அடியிலும், ஓரத்திலும் பால் கட்டிவிடக் கூடாது. கிளறிக் கொண்டே இருக்கவும். பால் சிறிது சுண்டி மஞ்சள் நிறத்திற்கு வரும்போது சர்க்கரையைத் தூவி கிளறி விடவும். முந்திரியை நெய்விட்டு பொறித்து அதனை மிக்ஸியில் போட்டு நன்கு பொடி செய்து, அந்த பொடியையும் பாலில் போட்டு கிளறி விடவும். சர்க்கரை பாலுடன் நன்கு சேர்ந்ததும் பால் சிறிது கெட்டியாகத் துவங்கும். அப்போது 3 தேக்கரண்டி நெய்யை பாலில் விடவும். 10 நிமிடங்கள் கிளறிக் கொண்டே இருக்கவும். பால்கோவா சிறிது தளதளவென்று இருக்கும்போதே இறக்கிவிடவும். நெய் சேர்த்துள்ளதால் பின்பு இது இறுகு

பொன்னாங்கண்ணிக்கீரை ரசம்

Image
பொன்னாங்கண்ணிக்கீரை ரசம் தேவை: சுத்தம் செய்து பொடியாக நறுக்கிய பொன்னாங்கண்ணிக்கீரை - ஒரு கப் புளிக்கரைசல் - கால் கப் தக்காளி - பாதியளவு (பொடியாக நறுக்கவும்) பூண்டு - 2 பல் (தட்டவும்) மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு. வறுக்க: துவரம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன் காய்ந்த மிளகாய் - ஒன்று மிளகு, தனியா (மல்லி) - தலா ஒரு டீஸ்பூன் சீரகம் - அரை டீஸ்பூன். தாளிக்க: கடுகு - ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு  எண்ணெய் - ஒரு டீஸ்பூன் பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன். செய்முறை: வெறும் வாணலியில் வறுக்கக்கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்து லேசாக வறுத்து மிக்ஸியில் கொரகொரப்பாகப் பொடித்தெடுக்கவும். புளிக்கரைசலுடன் ஒரு கப் தண்ணீர், உப்பு, மஞ்சள்தூள், பொன்னாங் கண்ணிக்கீரையைச் சேர்த்து வேகவிடவும். கீரை அரை வேக்காடு பதத்தில் வெந்த பிறகு தக்காளி, பூண்டு சேர்த்து வேகவிடவும். பிறகு, பொடித்த பொடியைத் தூவி, நுரை வரும்போது இறக்கவும். வாணலியில் தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்துத் தாளித்து ரசத்துடன் சேர்க்கவும். இதை டம்ளரில் ஊற்றிக் குடிக்கலாம்; சாதத்தில்

கறிவேப்பிலை ஜூஸா? அடேங்கப்பா ! குடிச்சா இவ்வளவும் நடக்குமா?

Image
கறிவேப்பிலை ஜூஸா? அடேங்கப்பா ! குடிச்சா இவ்வளவும் நடக்குமா?  படியுங்கள் புரியும் அதிக நறுமணமும் சத்துக்களும் கொண்ட கறிவேப்பிலை எல்லா சீசன்களிலும் கிடைக்கக்கூடிய ஒன்று. கறிவேப்பிலையில் புரதம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, பி, சி ஆகியவை மிக அதிகமாக இருக்கின்றன. கறிவேப்பிலையின் நன்மைகள் கறிவேப்பிலையை நாம் உணவில் அதிகமாக சேர்த்துக் கொண்டோமேயானால், பித்தக் கோளாறு, வயிற்றுவலி, ஜீரணக்கோளாறு போன்ற பிரச்னைகள் தீர்க்கப்படுவதோடு, ரத்தம் சுத்திகரிக்கப்பபடுகிறது. இளநரையைப் போக்குவதற்கு கறிவேப்பிலையைப் பச்சையாக சாப்பிட வேண்டும். பார்வைக் கோளாறுகள் நீங்கி, கண்கள் பிரகாசமாகத் தெரியும். தலைமுடியைக் கருமையாக்கும். வளர்ச்சியைத் தூண்டும். தொடர்ந்து ஒரு மாதம் வரை காலையும் மாலையும் கறிவேப்பிலையைச் சாப்பிட்ட வர, நீரிழிவு நோய் கட்டுப்படுத்தப்படும். வெண்குஷ்டம், மூலம், தோல் வியாதிகளை போக்கக்கூடிய சக்தி கறிவேப்பிலைக்கு உண்டு. கறிவேப்பிலை ஜூஸ் ஒரு கைப்பிடியளவு கறிவேப்பிலையை எடுத்து, சுத்தமாகக் கழுவி, மிக்சியில் போட்டு நன்றாக அரைத்துச் சாறினை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். வடிகட்டிய

கேரட் லட்டு

Image
கேரட் லட்டு தேவை: கேரட் துருவல் - 4 கப் தேங்காய்த் துருவல் - ஒரு கப் சர்க்கரை - 2 கப் நெய் - 6 டேபிள்ஸ்பூன் ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன் முந்திரி, பாதாம் - தலா 10 பாசிப்பருப்பு - 10 டேபிள்ஸ்பூன். செய்முறை: வெறும் வாணலியில் பாசிப்பருப்பைச் சேர்த்து வறுத்து, மிக்ஸியில் பவுடராக அரைத்தெடுக்கவும். அதே வாணலியில் பாதாம், முந்திரி சேர்த்து லேசாக வறுத்து மிக்ஸியில் ஒன்றிரண்டாகப் பொடிக்கவும். அதே வாணலியில் நெய்யை ஊற்றி கேரட் துருவலைச் சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். அதனுடன் தேங்காய்த் துருவல் சேர்த்துச் சிறிது நேரம் வதக்கவும். பிறகு சர்க்கரை சேர்த்துக் கிளறி, அடுப்பை சிறு தீயில் வைத்து மூடி போடவும். ஐந்து நிமிடங்கள் கழித்துத் திறந்து, ஏலக்காய்த்தூள் தூவி இறக்கவும். நன்கு ஆறியதும் பாசிப்பருப்பு மாவு,  பொடித்த முந்திரி, பாதாம் சேர்த்து நன்றாகக் கலக்கவும். பிறகு லட்டுகளாகப் பிடிக்கவும். மற்ற லட்டுகள் மாதிரி இது நீண்ட நாள்கள் இருக்காது. விரைவிலேயே பயன்படுத்திவிட வேண்டும். குறிப்பு: கேரட் பிரகாசமான பார்வைக்கு வழிவகுப்பதுடன் புற்றுநோய் வருவதையும் தடுக்கி

எளிய பாட்டி வைத்தியம்:-

Image
எளிய பாட்டி வைத்தியம்:- 1. நெஞ்சு சளிக்கு தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும். 2. தலைவலிக்கு ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும். 3. தொண்டை கரகரப்புசுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும். 4. தொடர் விக்கல்uக்கு நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும். 5. வாய் நாற்றம் சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும். 6. உதட்டு வெடிப்புக்கு கரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வர உதட்டு வெடிப்பு குணமாகும். 7. அஜீரணம் ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும். 8. குடல்புண்க்கு மஞ்சளை தணலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரி

புதினா தவா கட்லெட்

Image
புதினா தவா கட்லெட் தேவை: புதினா இலைகள் - 2 கப் குழைவாக வேகவைத்த சாதம் - ஒரு கப் இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன் கொத்தமல்லி இலைகள் - அரை கப் சோள மாவு (கார்ன் ஃப்ளார்) - 4 டேபிள்ஸ்பூன் கேரட் துருவல் - 3 டேபிள்ஸ்பூன் பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன் ஓமம் - ஒரு டீஸ்பூன் பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்) எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன் உப்பு - தேவையான அளவு. செய்முறை: புதினாவுடன் கொத்தமல்லி இலைகள், பச்சை மிளகாய், சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கெட்டியாக அரைத்தெடுக்கவும். சாதத்தை நன்கு மசிக்கவும். அதனுடன் அரைத்த விழுது, இஞ்சி - பூண்டு விழுது, உப்பு, கேரட் துருவல், ஓமம், பெருங்காயத்தூள், சோள மாவு சேர்த்துப் பிசையவும். பிறகு விரும்பிய வடிவில் கட்லெட்டுகளாகத் தட்டவும். தோசைக்கல்லைக் காயவைத்து, சிறிதளவு எண்ணெய் ஊற்றி, கட்லெட்டுகளை அடுக்கி இருபுறமும் வேகவைத்து எடுக்கவும். இதற்குத் தொட்டுக்கொள்ள எதுவுமே தேவையில்லை. குறிப்பு: வாய் துர்நாற்றத்தைப் போக்குவதுடன் பற்கள் மற்றும் ஈறுகளின் உறுதிக்கும் உதவுகிறது. தொண்டையில் தொற்று ஏற்பட்டால் நீக்கி மீண்டும் வராமல் தடுக்கும்
Image
பொன்னாங்கண்ணிக்கீரை ரசம் தேவை: சுத்தம் செய்து பொடியாக நறுக்கிய பொன்னாங்கண்ணிக்கீரை - ஒரு கப் புளிக்கரைசல் - கால் கப் தக்காளி - பாதியளவு (பொடியாக நறுக்கவும்) பூண்டு - 2 பல் (தட்டவும்) மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு. வறுக்க: துவரம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன் காய்ந்த மிளகாய் - ஒன்று மிளகு, தனியா (மல்லி) - தலா ஒரு டீஸ்பூன் சீரகம் - அரை டீஸ்பூன். தாளிக்க: கடுகு - ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு  எண்ணெய் - ஒரு டீஸ்பூன் பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன். செய்முறை: வெறும் வாணலியில் வறுக்கக்கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்து லேசாக வறுத்து மிக்ஸியில் கொரகொரப்பாகப் பொடித்தெடுக்கவும். புளிக்கரைசலுடன் ஒரு கப் தண்ணீர், உப்பு, மஞ்சள்தூள், பொன்னாங் கண்ணிக்கீரையைச் சேர்த்து வேகவிடவும். கீரை அரை வேக்காடு பதத்தில் வெந்த பிறகு தக்காளி, பூண்டு சேர்த்து வேகவிடவும். பிறகு, பொடித்த பொடியைத் தூவி, நுரை வரும்போது இறக்கவும். வாணலியில் தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்துத் தாளித்து ரசத்துடன் சேர்க்கவும். இதை டம்ளரில் ஊற்றிக் குடிக்கலாம்; சாதத்தில் போட்

சுரைக்காய் பொரியல்

Image
சுரைக்காய் பொரியல் தேவை: தோல், விதை நீக்கி நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிய சுரைக்காய் - 2 கப் தக்காளி, வெங்காயம் - தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்) பொடியாக நறுக்கிய பூண்டு - ஒரு டேபிள்ஸ்பூன் கடுகு - ஒரு டீஸ்பூன் பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன் கறிவேப்பிலை -  சிறிதளவு நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன் உப்பு - தேவையான அளவு. செய்முறை: அடிகனமான வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், வெங்காயம், பூண்டு, தக்காளி, உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும். அதனுடன் சுரைக்காய் சேர்த்து வதக்கி மூடி வைக்கவும். எட்டு நிமிடங்களில் வெந்துவிடும். பிறகு திறந்து, கொத்தமல்லித்தழை தூவிக் கிளறி இறக்கவும். இதை சாதத்துக்குத் தொட்டுக்கொள்ளலாம்; சப்பாத்திக்கும் தொட்டுக்கொள்ளலாம். குறிப்பு: சுரைக்காய் நீர்ச்சத்து மிகுந்தது. இதில் உள்ள பாஸ்பரஸ்... பற்கள், எலும்புகளுக்குப் பலம் கொடுக்கும். சுரைக்காய் பொரியலை வாரம் மூன்று முறை சாப்பிட்டால், உடல் நன்கு இளைக்கும். 🥗அம்மா சமையல் 🥗

முகலாய பிரியாணி

Image
முகலாய பிரியாணி தேவையான பொருட்கள்: மட்டனுக்கு... மட்டன் - 1 கிலோ வெங்காய பேஸ்ட் - 4 டேபிள் ஸ்பூன் பாதாம் பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன் தயிர் - 1/2 கப் புதினா - 1 கட்டு (நறுக்கியது) தேங்காய் பால் - 1/2 கப் மல்லி தூள் - 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் மிளகு தூள் - 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன் தண்ணீர் - 2 கப் சாதத்திற்கு... பாசுமதி அரிசி - 2 கப் ஏலக்காய் - 4 கிராம்பு - 4 பட்டை - 2 உப்பு - தேவையான அளவு நெய் - 2 டேபிள் ஸ்பூன் தண்ணீர் - 4 கப் செய்முறை: 1.முதலில் மட்டனை நன்கு சுத்தமாக கழுவி, நீரை முற்றிலும் வடிகட்டி விட்டு, ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ள வேண்டும். 2.பின் அந்த மட்டனில் தயிர், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து 2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். 3.இரண்டு மணிநேரம் ஆன பின்பு, ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காய பேஸ்ட் போட்டு, 5-6 நிமிடம் வதக்க வேண்டும். 4.பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 2 நிமிடம் வதக்கி, பாதாம் பேஸ்ட், மல்லி தூள், ம

பிஸிபெலாபாத் ( சாம்பார் சாதம்)

Image
பிஸிபெலாபாத்  ( சாம்பார் சாதம்) எனக்கு ரொம்பவும் பிடித்தமான சாம்பார் சாதம். இந்த உணவை நான் சமைத்து பல பேரிடம் பாராட்டு பெற்றுள்ளேன். இந்த உணவில் நன்றாக மசியகூடிய காய்கறிகளை சேர்த்து கொள்ளவும். அப்பொழுது தான் சுவை கூடும். நாட்டு துவரம் பருப்பு உபயோக படுத்தினால் சுவை கூடும். பசுநெய்யை மட்டும் உபயோகிக்கவும். பசுநெய்யை உபயோக படுத்த முடியாவிட்டால் வேர்கடலை எண்ணெய்யை உபயோக படுத்தலாம். தேவையான பொருட்கள் துவரம் பருப்பு 3/4 கப் புது பச்சை அரிசி 3/4 கப் தண்ணீர் 6 கப் சுடு தண்ணீர் 1 கப் பீன்ஸ் 50 கிராம் ( பொடியாக நறுக்கியது ) கத்திரிக்காய் 100 கிராம் ( பொடியாக நறுக்கியது ) உருளைகிழங்கு 50 கிராம் ( பொடியாக நறுக்கியது ) தக்காளி 1/2 ( பொடியாக நறுக்கியது ) சின்ன வெங்காயம் 5 ( பொடியாக நறுக்கியது )  மசாலா பொடி -தேவையான அளவு பசு நெய் 3 1/2 மேஜைக்கரண்டி கடுகு 1/4 தேக்கரண்டி கறிவேப்பிலை 2 கொத்து புளி 1 எலுமிச்சை பழ அளவு துருவிய வெல்லம் 1 மேஜைக்கரண்டி பிசிபேலா பாத் மசாலா பொடி 3 மேஜைக்கரண்டி உப்பு தேவையான அளவு முந்திரி பருப்பு 10 தண்ணீர் 1 கப் விருப்பமான அல்லது வீட்டில

தயிரின் 20 அற்புத மருத்துவ பயன்கள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்!

Image
தயிரின் 20 அற்புத மருத்துவ பயன்கள் பற்றிதெரிந்துகொள்ளுங்கள்! தெரிந்துகொள்ளுங்கள்! 1. ஒரு கை நிறைய தயிரை எடுத்து தலையில் நன்றாக தேய்த்தால் தூக்கம் நன்றாக வரும். 2. தயிரில் உள்ள புரோட்டீன், பாலில் உள்ள புரோட்டீனை விட சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும். 3. தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து. 4. குளிர்ச்சியைத் தரும். நல்ல ஜீரண சக்தியை தருவது தயிர்தான். 5. பால் சாப்பிட்டால் ஒரு மணி நேரம் கழித்து 32% பால்தான் ஜீரணமாகியிருக்கும். ஆனால், தயிர் சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் 91% உடனே ஜீரணிக்கப்பட்டிருக்கும். 6. பாலைத் தயிராக மாற்றும் பாக்டீரியா குடலில் உருவாகும் நோய் கிருமி பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கிறது. 7. த‌‌யி‌ரி‌ல் இரு‌க்கு‌ம் பா‌க்டீ‌ரியா ஜீரண சக்தியை அதிகரிக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாவை உருவாக்குகிறது. 8. பாலில் LACTO இருக்கிறது. தயிரில் இருப்பது LACTOBACIL. இது ஜீரண சக்தியை தூண்டி வயிற்றின் உபாதைகளை சரி செய்கிறது. 9. வயிறு சரியில்லாத பொழுது வெறும் தயிர் சோறு மட்டுமாவது உணவாக உட்கொள்ளச் சொல்லி மருத்துவர்கள் சொல்வார்கள். 10. அதிகமாக வயிற்றுபோக்கு ஏற்படும் பொழுது வெ

தலைமுடி பராமரிப்பில் மருதாணியின் பங்கு....!

Image
தலைமுடி பராமரிப்பில் மருதாணியின் பங்கு....! முடி கொட்டுதலை நிறுத்தி மேலும் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறத. ஹென்னாவின் இயற்கை பண்புகள் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன. இதன் தூளை  வழக்கமான முடி எண்ணெயுடன் கலந்து 5 முதல் 6 நிமிடங்கள் கொதிக்கவைக்கவும். இந்த எண்ணெய் குளிர்ந்ததும், இதனை வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை பயன்படுத்தலாம். இது முடி உதிர்தலைத் தடுக்கும் மற்றும் முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. மருதாணி முடி பராமரிப்பு திறனுக்காக பொடுகுத்தொல்லை மற்றும் தலைமுடி அரித்தல் போன்ற மற்ற முடி சம்பந்தப்பட்ட சிக்கல்களைத் தடுக்க  பயன்படுத்தப்படுகிறது. அவுரி பொடி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இயற்கையாக இது கருமை நிறத்தை தரும். இதனை முடிகேற்ற அளவில் எடுத்து, சம அளவு மருதாணிபொடியுடன் அல்லது மருதாணி இலையுடன் அரைத்து தலையில் தடவுங்கள். அரை மணி நேரம் கழித்து குளித்தால் முடி கருமை நிறத்தில் மாறும் தேயிலையை பொடியை வெதுவெதுப்பான நீரில் ஊறவைத்து அரைமணி நேரம் கழித்து அதனை அரைத்து அதில் எலுமிச்சை சாறு கலந்து கொள்ளுங்கள். இதனை தலையில் தடவி அரைமணி நேரம் ஊற வைத்து பின் குளித்தால் நரை முடி கரும

கோயம்புத்தூர் சிக்கன் சுக்கா

Image
தேவையான பொருட்கள்: சிக்கன் – 1 கிலோ , பெரிய வெங்காயம் – 3, இஞ்சி பூண்டு விழுது -3 டீஸ்பூன், பச்சை மிளகாய் – 3 , கறிமாசால் தூள் – அரைடீஸ்பூன், மஞ்சள் தூள் – அரைஸ்பூன், மிளகாய்த்தூள் -2 டீஸ்பூன், மிளகுத்தூள் -1 டீஸ்பூன், சீரகத்தூள் – 1 டீஸ்பூன், மல்லித்தூள் – 3 டீஸ்பூன், எண்ணெய் – 4 டேபிள்ஸ்பூன், உப்பு – தேவைக்கு, கொத்தமல்லி இலை, கருவேப்பிலை செய்முறை : 1.முதலில் கோழிக்கறியை சுத்தம் செய்து இப்படி சிறிய துண்டுகளாக வெட்டிபோட்டு கழுவி நீர் வடிகட்டிக் கொள்ளவும். 2.பிறகு கோழிக்கறி, உப்பு, மஞ்சள்தூள் ஆகியவற்றை நன்றாகக் கல‌ந்து அரை மணி நேரம் ஊற‌ வைக்கவும். 3.வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கிய‌ எண்ணெயில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை, சேர்த்து நன்றாக வதக்கவும். நன்றாக வதக்கிய பின் இஞ்சி, பூண்டு, கறி மசாலா சேர்த்து வதக்கவும். 4.இஞ்சி பூண்டு வதக்கியவுடன் கோழிக்கறி சேர்த்து பிரட்டவும், தண்ணீர் சேர்க்க வேண்டாம். 5.மசாலா பொருட்கள் அனைத்தும் சேர்த்து நன்கு பிரட்டி மூடி போட்டு மீடியம் தீயில் 20 நிமிடம் வேக விடவும்.இடையில் பிரட்டி விடவும். 6.நன்றாக சுண்டி

தேன் தினை லட்டு

Image
தேன் தினை லட்டு தேவையான பொருட்கள்: வறுத்த தினை மாவு — 1 கப் நாட்டுச் சர்க்கரை — 1/2 கப் ( பொடித்தது ) தேன் — 1/4 கப் ஏலப்பொடி — 1 டீஸ்பூன் நெய் — 3 டீஸ்பூன் முந்திரி, திராட்சை — தேவையான அளவு செய்முறை: தினை அரிசியை வெறும் வாணலியில் வாசனை வரும் வரை மிதமான சூட்டில் வறுக்கவும். ஆறியதும் மிக்சியில் பொடித்துக்கொள்ளவும். நெய்யில் முந்திரி, திராட்சையை வறுத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் வறுத்த மாவு, பொடித்த சர்க்கரை, ஏலப்பொடி, தேன், நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து நன்கு கலந்து உருண்டைகளாகப் பிடிக்கவும். 🥗அம்மா சமையல் 🥗

Home Remedies for Dark Elbows and Knees

Image
சுடு தண்ணீரில் எலுமிச்சை சாறும், சிறிதளவு தேனும் கலந்து குடிக்க புத்துணர்ச்சியாய் இருக்கும். *வைட்டமின் சி சத்து அதிகம் உள்ள நெல்லிக்காய் சாப்பிட்டால் சருமத்தின் உள்சூடு பாதுகாக்கப்படும். *கால்பாதம் வெடித்து விடுவது பனிக்காலங்களில் சகஜம். இதற்கு பாதங்களை வெதுவெதுப்பான நீரில் வைத்து நீரில் உப்பு சிறிது ஆலிவ் ஆயில் சேர்க்கவும். *15 நிமிஷம் கழித்து ப்யூமிக்ஸ் கல்லில் நன்கு தேய்க்கவும். பிறகு பாதங்களை துடைத்து லேசாக க்ரீம் தடவவும். பெட்ரோலியம் ஜெல்லி மிகவும் நல்லது அது வாஸ்லினுக்கு சமம். தோலுக்கு சிறந்த பாதுகாப்பு. *உதடுகளுக்கு அவ்வப்போது சிறிது வெண்ணெய் பூசவும். வாஸ்லின் அல்லது உதடுகளுக்கென்றே உள்ள பிரத்தியேகக் க்ரீம்களை பயன்படுத்தலாம். *நிறைய பழங்கள், கேரட் சாப்பிடுவது உடல் வறட்சியை நீக்கும். சுடுநீர் குடித்து வந்தால் வறட்சியை கட்டுக்குள் வைக்கும். தோலில் ஏற்படும் சுருக்கத்தைப் போக்க ஆயில் மசாஜ்: பாதாம் எண்ணெய், நல்லெண்ணெய் இரண்டையும் சமமாக எடுத்து உடம்பு முழுவதும் தடவி மூன்று மணி நேரம் ஊற வையுங்கள். பின்னர் கோதுமைத் தவிடால் ஒத்தடம் கொடுத்து கடலை மாவினால் தேய்த்துக் கழுவ

சத்து நிறைந்த மரவள்ளி கிழங்கு தோசை

Image
சத்து நிறைந்த மரவள்ளி கிழங்கு தோசை மரவள்ளி கிழங்கில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று மரவள்ளி கிழங்கை வைத்து சத்தான தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : > >மரவள்ளி கிழங்கு - 250 கிராம் >பச்சரிசி - 250 கிராம் >வெந்தயம் - 1 தேக்கரண்டி >சீரகம் - 1 தேக்கரண்டி >பச்சை மிளகாய் - 3 >செய்முறை : > >பச்சரிசியை நன்கு கழுவி வெந்தயம் சேர்த்து 2 மணி நேரம் ஊறவைக்கவும். > >மரவள்ளி கிழங்கு தோல் சீவி பொடியாக நறுக்கிகொள்ளவும. > >அரிசி நன்றாக ஊறியதும் அதனுடன் சீரகம், வெந்தயம், பச்சைமிளகாய் சேர்த்து நைசாக அரைக்கவும். > >மரவள்ளி கிழங்கையும் அரைத்து மாவுடன் சேர்த்து நன்றாக கலக்கவும். அதிக நேரம் புளிக்க வைக்க தேவையில்லை. 2 லிருந்து 3 மணி நேரம் வைத்து தோசை வார்க்கலாம். தோசை மாவு நீர்க்க வைத்துக்கொள்ளவும். > >தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் ஒரு கரண்டி மாவு எடுத்து மெல்லிய தோசையாக வார்த்தெடுக்கவும். விருப்பத்திற்கேற்ப எண்ணெய் சேர்த்துக்கொள்ளலாம். > >சூப்பரான மரவள்ளி கிழங்கு

சிக்கன் கிரேவி​

Image
சிக்கன் கிரேவி​ சிக்கன் - லெக் பீசெஸ் - 14 எண்ணை- தாளிக்க பல்லாரி-1 , தக்காளி-2 ( நறுக்கிக்கொள்ளவும் ) மிளகாய்த்தூள் -1 1/2 ஸ்பூன் சீரகத்தூள் - 1 ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது - 2 ஸ்பூன் மல்லி ,புதினா கொஞ்சம் பெருஞ்சீரகம் - கொஞ்சம் கரம் மசாலா - 1 1/2 ஸ்பூன் உப்பு - தேவையான அளவு தண்ணீர் செய்முறை அடுப்பில் பாத்திரத்தில் மீடியம் தீயில் கொஞ்சம் அதிகமாக எண்ணை ஊற்றி , சூடு வந்ததும் அதில் பொடிதாக நறுக்கிய பல்லாரி,தக்காளி,பெருஞ்சீரகம் , மிளகாய்த்தூள் போட்டு நன்கு மசியும் வரை வதக்கவும் , அதோடு இஞ்சிபூண்டு , மல்லி , புதினா, போட்டு, சீரகத்தூள்,கரம் மசாலா பொடிகளையும் போட்டு , உப்பு போட்டு, கொஞ்சம் தண்ணீர் ஊற்றி, இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் வேகவிட்டு , பின்னர் சிக்கன் துண்டுகளைப் போட்டு தேவையான தண்ணீர் விட்டு வேக வைக்கவும்.

கொத்தமல்லி&புதினா சட்னி

Image
☘கொத்தமல்லி&புதினா சட்னி☘ தேவையான ப்பொருட்கள்.     : கொத்தமல்லி தழை   : 1 கப் புதினா.      : 1 கப் கறிவேப்பிலை.    : சிறிது புளி.        : சிறிது பூண்டு.     : 4 பல் உளுந்து.   : 2 டேபிள்ஸ்பூன் கடுகு.      : 1 டேபிள்ஸ்பூன் மிளகாய் வற்றல்.    : 4 தேங்காய் துருவல்.  : 2 டேபிள்ஸ்பூன் செய்முறை.   : 1.ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் உளுந்து ; பூண்டு; மிளகாய் வற்றல்;புளி சேர்த்து நன்றாக வதக்கவும். 2. பின்னர் சிறிது கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். 3. கொத்தமல்லி தழை மற்றும் புதினா இலை போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். 4.ஆறியவுடன் தேங்காய் துருவல் மற்றும் வதக்கிய பொருட்கள் மற்றும் உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து கொள்ளவும். 5.இறுதியாக கடுகு உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கொட்டவும். 6. இட்லி மற்றும் தோசை யுடன் பரிமாறவும்.