பொன்னாங்கண்ணிக்கீரை ரசம்

தேவை:

சுத்தம் செய்து பொடியாக நறுக்கிய பொன்னாங்கண்ணிக்கீரை - ஒரு கப்
புளிக்கரைசல் - கால் கப்
தக்காளி - பாதியளவு (பொடியாக நறுக்கவும்)
பூண்டு - 2 பல் (தட்டவும்)
மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு.

வறுக்க:

துவரம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - ஒன்று
மிளகு, தனியா (மல்லி) - தலா ஒரு டீஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்.

தாளிக்க:

கடுகு - ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு 
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்.

செய்முறை:

வெறும் வாணலியில் வறுக்கக்கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்து லேசாக வறுத்து மிக்ஸியில் கொரகொரப்பாகப் பொடித்தெடுக்கவும்.

புளிக்கரைசலுடன் ஒரு கப் தண்ணீர், உப்பு, மஞ்சள்தூள், பொன்னாங் கண்ணிக்கீரையைச் சேர்த்து வேகவிடவும். கீரை அரை வேக்காடு பதத்தில் வெந்த பிறகு தக்காளி, பூண்டு சேர்த்து வேகவிடவும்.


பிறகு, பொடித்த பொடியைத் தூவி, நுரை வரும்போது இறக்கவும். வாணலியில் தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்துத் தாளித்து ரசத்துடன் சேர்க்கவும்.

இதை டம்ளரில் ஊற்றிக் குடிக்கலாம்; சாதத்தில் போட்டுப் பிசைந்தும் சாப்பிடலாம்.

குறிப்பு:

இதைத் தொடர்ந்து 45 நாள்கள் சாப்பிட்டு வர... தோல் பளபளப்பாகும். நல்ல நிறம் கிடைக்கும். கண்களும் நல்ல ஒளியுடன் மின்னும்.

🥗அம்மா சமையல் 🥗

Comments

Popular posts from this blog

Increase Instagram Followers Best App