வாழைத்தண்டு - வேர்க்கடலை பொரியல்

வாழைத்தண்டு - வேர்க்கடலை பொரியல்

தேவையானவை:

வாழைத்தண்டு -1,
வேர்க்கடலை - 2 கைப்பிடி,
கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப் பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 2,
பெருங்காயத் தூள் - கால் டீஸ்பூன்,
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை,
கறிவேப்பிலை,தேங்காய் துருவல், மோர் - சிறிதளவு,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

வாழைத்தண்டை பொடியாக நறுக்கி மோரில் போட்டுவைக்கவும்.

கடாயில் எண்ணெய்விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத் தூள், கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும்.

நறுக்கிய வாழைத்தண்டைப் போட்டு, மஞ்சள் தூள், உப்பு, வேர்க்கடலை சேர்த்துக் கிளறி மூடிவைக்கவும்.  நன்றாக வெந்ததும் தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும். 


பலன்கள்:

கோடையில் சிறுநீரகத் தொற்று ஏற்படாமல் தடுக்கும். உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், தாது உப்புக்கள், புரதம் இருப்பதால் தசைகள் உறுதியாகும்.

நார்ச்சத்து, நீர்ச்சத்து இருப்பதால், நல்ல ஜீரண சக்தியைத் தரும். மலச்சிக்கல் வராமல் காக்கும்.

🥗அம்மா சமையல் 🥗

Comments

Popular posts from this blog