சத்து நிறைந்த மரவள்ளி கிழங்கு தோசை

சத்து நிறைந்த மரவள்ளி கிழங்கு தோசை


மரவள்ளி கிழங்கில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று மரவள்ளி கிழங்கை வைத்து சத்தான தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.


தேவையான பொருட்கள் :

>

>மரவள்ளி கிழங்கு - 250 கிராம்

>பச்சரிசி - 250 கிராம்

>வெந்தயம் - 1 தேக்கரண்டி

>சீரகம் - 1 தேக்கரண்டி

>பச்சை மிளகாய் - 3


>செய்முறை :

>

>பச்சரிசியை நன்கு கழுவி வெந்தயம் சேர்த்து 2 மணி நேரம் ஊறவைக்கவும்.

>

>மரவள்ளி கிழங்கு தோல் சீவி பொடியாக நறுக்கிகொள்ளவும.

>

>அரிசி நன்றாக ஊறியதும் அதனுடன் சீரகம், வெந்தயம், பச்சைமிளகாய் சேர்த்து நைசாக அரைக்கவும்.

>

>மரவள்ளி கிழங்கையும் அரைத்து மாவுடன் சேர்த்து நன்றாக கலக்கவும். அதிக நேரம் புளிக்க வைக்க தேவையில்லை. 2 லிருந்து 3 மணி நேரம் வைத்து தோசை வார்க்கலாம். தோசை மாவு நீர்க்க வைத்துக்கொள்ளவும்.

>

>தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் ஒரு கரண்டி மாவு எடுத்து மெல்லிய தோசையாக வார்த்தெடுக்கவும். விருப்பத்திற்கேற்ப எண்ணெய் சேர்த்துக்கொள்ளலாம்.

>

>சூப்பரான மரவள்ளி கிழங்கு தோசை ரெடி.
🥗அம்மா சமையல் 🥗

Comments

Popular posts from this blog

Increase Instagram Followers Best App