தினை சந்தகை

தினை  சந்தகை

தேவையான பொருட்கள்
தினை அரிசி - 150 கிராம்
தேங்காய் - ஒரு மூடி (துருவியது)
ஏலக்காய் - இரண்டு
உப்பு - சிறிதளவு
வெல்லம் - 50 கிராம்


செய்முறை

தினை அரிசியை இரண்டு மணி நேரம் ஊறவிடவும். அரிசியுடன் உப்பு சேர்த்து நன்கு மிருதுவாக கெட்டியாக அரைத்துக்கொள்ளவும். இந்த மாவை இட்லித் தட்டில் வைத்து வேகவிடவும். வெந்ததும், மாவை இடியாப்ப அச்சில் வைத்து இடியாப்பமாகப் பிழிந்து எடுத்தால், சந்தகை ரெடி.


தேங்காயை பாகாக்கி, அதில் வெல்லம் ஏலக்காய் சேர்த்து சந்தகையோடு சாப்பிட சுவையாக இருக்கம்.

பலன்கள்:

தினையில் பீட்டாகரோட்டின் அதிகம் என்பதால், கண் பார்வைக்கு உதவும். நார்ச்சத்தும் தேவையான அளவு இருக்கிறது. வெல்லமும் தேங்காய்ப்பால் சேர்வதால், இரும்புச் சத்து கிடைக்கும்!


🥗அம்மா சமையல் 🥗

Comments

Popular posts from this blog