Home Remedies for Dark Elbows and Knees

சுடு தண்ணீரில் எலுமிச்சை சாறும், சிறிதளவு தேனும் கலந்து குடிக்க புத்துணர்ச்சியாய் இருக்கும்.

*வைட்டமின் சி சத்து அதிகம் உள்ள நெல்லிக்காய் சாப்பிட்டால் சருமத்தின் உள்சூடு பாதுகாக்கப்படும்.

*கால்பாதம் வெடித்து விடுவது பனிக்காலங்களில் சகஜம். இதற்கு பாதங்களை வெதுவெதுப்பான நீரில் வைத்து நீரில் உப்பு சிறிது ஆலிவ் ஆயில் சேர்க்கவும்.

*15 நிமிஷம் கழித்து ப்யூமிக்ஸ் கல்லில் நன்கு தேய்க்கவும். பிறகு பாதங்களை துடைத்து லேசாக க்ரீம் தடவவும். பெட்ரோலியம் ஜெல்லி மிகவும் நல்லது அது வாஸ்லினுக்கு சமம். தோலுக்கு சிறந்த பாதுகாப்பு.

*உதடுகளுக்கு அவ்வப்போது சிறிது வெண்ணெய் பூசவும். வாஸ்லின் அல்லது உதடுகளுக்கென்றே உள்ள பிரத்தியேகக் க்ரீம்களை பயன்படுத்தலாம்.

*நிறைய பழங்கள், கேரட் சாப்பிடுவது உடல் வறட்சியை நீக்கும். சுடுநீர் குடித்து வந்தால் வறட்சியை கட்டுக்குள் வைக்கும்.

தோலில் ஏற்படும் சுருக்கத்தைப் போக்க

ஆயில் மசாஜ்: பாதாம் எண்ணெய், நல்லெண்ணெய் இரண்டையும் சமமாக எடுத்து உடம்பு முழுவதும் தடவி மூன்று மணி நேரம் ஊற வையுங்கள். பின்னர் கோதுமைத் தவிடால் ஒத்தடம் கொடுத்து கடலை மாவினால் தேய்த்துக் கழுவுங்கள். வாரம் ஒருமுறை இப்படிச்செய்துவர, சருமத்தில் சுருக்கம் மறைந்துவிடும்.

கறுத்துப்போன முழங்கையை எப்படி பளிச்சாக்குவது?

நாற்காலியில் ஒரே பொசினில் உட்கார்ந்திருந்தால் முட்டிகள் உராய்ந்து கறுத்துப் போகும். நாற்காலியில் வியர்வை படாமல் பார்த்துக் கொண்டாலும், முட்டி கறுப்பாகாது. நாற்காலியின் கைப்பிடிகளின் மீது டவலையோ அல்லது வெல்வெட் துணியையோ போட்டும் உட்காரலாம். இதனால் கை முட்டி உராயாமல் இருக்கும்.

Comments

Popular posts from this blog

Increase Instagram Followers Best App