வயதானவர்களுக்கு சத்தான சாமை, வரகு அடை

வயதானவர்களுக்கு சத்தான சாமை, வரகு அடை 

சிறுதானியங்களில் சாமை, வரகு மிகவும் சத்து நிறைந்தது.
இவை இரண்டையும் வைத்து சத்தான அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

#தேவையான #பொருட்கள் :

சாமை (Kodo Millet) அரிசி - 1/2 கப்
வரகு (Little Millet) அரிசி - 1/2 கப்
பச்சரிசி - 1/2 கப்
துவரம் பருப்பு - 3/4 கப்
கடலை பருப்பு - 1/4 கப்
வெந்தயம் - 2 டீஸ்பூன்
சீரகம் - 2 டீஸ்பூன்
மிளகு - 2 ஸ்பூன்
ப.மிளகாய் - 2
வெங்காயம் - 2
கறிவேப்பிலை - 1 கைபிடியளவு
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

#தாளிக்க :

கடுகு, உளுத்தம் பருப்பு - தேவையான அளவு.

#செய்முறை :

அரிசி வகைகளையும், பருப்பு வகைகளையும் ஒன்றாக கழுவி வெந்தயம் சேர்த்து 3 மணி நேரம் ஊற வைக்கவும்.

வெங்காயம், ப.மிளகாய், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

மிக்ஸியில் சீரகம், மிளகு, உப்பு சேர்த்து எல்லாவற்றையும் தோசை மாவு பதத்திற்கு அரைக்கவும்.

ஒரு கடாயில், எண்ணெய் விட்டு சூடானதும், கடுகு, உளுந்தம் பருப்பு தாளித்து, வெங்காயம், ப.மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி மாவுடன் சேர்த்து கலந்து அரை மணி நேரம் அப்படியே வைக்கவும்.


தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை அடைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுத்து பரிமாறவும்.

சூப்பரான சத்தான சாமை, வரகு அடை ரெடி.

Comments

Popular posts from this blog

Increase Instagram Followers Best App