கறிவேப்பிலை ஜூஸா? அடேங்கப்பா ! குடிச்சா இவ்வளவும் நடக்குமா?

கறிவேப்பிலை ஜூஸா? அடேங்கப்பா ! குடிச்சா இவ்வளவும் நடக்குமா?  படியுங்கள் புரியும்

அதிக நறுமணமும் சத்துக்களும் கொண்ட கறிவேப்பிலை எல்லா சீசன்களிலும் கிடைக்கக்கூடிய ஒன்று.

கறிவேப்பிலையில் புரதம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, பி, சி ஆகியவை மிக அதிகமாக இருக்கின்றன.

கறிவேப்பிலையின் நன்மைகள்


கறிவேப்பிலையை நாம் உணவில் அதிகமாக சேர்த்துக் கொண்டோமேயானால், பித்தக் கோளாறு, வயிற்றுவலி, ஜீரணக்கோளாறு போன்ற பிரச்னைகள் தீர்க்கப்படுவதோடு, ரத்தம் சுத்திகரிக்கப்பபடுகிறது.

இளநரையைப் போக்குவதற்கு கறிவேப்பிலையைப் பச்சையாக சாப்பிட வேண்டும்.

பார்வைக் கோளாறுகள் நீங்கி, கண்கள் பிரகாசமாகத் தெரியும்.

தலைமுடியைக் கருமையாக்கும். வளர்ச்சியைத் தூண்டும்.

தொடர்ந்து ஒரு மாதம் வரை காலையும் மாலையும் கறிவேப்பிலையைச் சாப்பிட்ட வர, நீரிழிவு நோய் கட்டுப்படுத்தப்படும்.

வெண்குஷ்டம், மூலம், தோல் வியாதிகளை போக்கக்கூடிய சக்தி கறிவேப்பிலைக்கு உண்டு.

கறிவேப்பிலை ஜூஸ்

ஒரு கைப்பிடியளவு கறிவேப்பிலையை எடுத்து, சுத்தமாகக் கழுவி, மிக்சியில் போட்டு நன்றாக அரைத்துச் சாறினை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.

வடிகட்டிய சாறுடன் தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து அருந்தலாம். அதோடு, சில பேரிச்சம்பழங்களையும் சேர்த்து ஊற வைத்து அருந்தலாம்.

கறிவேப்பிலை சாறை வெறுமனே குடிப்பதைக் காட்டிலும் தேங்காய்ப்பால் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். டீ, காபிக்கு பதிலாக, காலையில் அருந்துவதற்கான மிகச் சிற்ந்த பானம் இது.

Comments

Popular posts from this blog

Increase Instagram Followers Best App