புதினா தவா கட்லெட்
புதினா தவா கட்லெட்
தேவை:
புதினா இலைகள் - 2 கப்
குழைவாக வேகவைத்த சாதம் - ஒரு கப்
இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
கொத்தமல்லி இலைகள் - அரை கப்
சோள மாவு (கார்ன் ஃப்ளார்) - 4 டேபிள்ஸ்பூன்
கேரட் துருவல் - 3 டேபிள்ஸ்பூன்
பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்
ஓமம் - ஒரு டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்)
எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
புதினாவுடன் கொத்தமல்லி இலைகள், பச்சை மிளகாய், சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கெட்டியாக அரைத்தெடுக்கவும். சாதத்தை நன்கு மசிக்கவும்.
அதனுடன் அரைத்த விழுது, இஞ்சி - பூண்டு விழுது, உப்பு, கேரட் துருவல், ஓமம், பெருங்காயத்தூள், சோள மாவு சேர்த்துப் பிசையவும்.
பிறகு விரும்பிய வடிவில் கட்லெட்டுகளாகத் தட்டவும்.
தோசைக்கல்லைக் காயவைத்து, சிறிதளவு எண்ணெய் ஊற்றி, கட்லெட்டுகளை அடுக்கி இருபுறமும் வேகவைத்து எடுக்கவும். இதற்குத் தொட்டுக்கொள்ள எதுவுமே தேவையில்லை.
குறிப்பு:
வாய் துர்நாற்றத்தைப் போக்குவதுடன் பற்கள் மற்றும் ஈறுகளின் உறுதிக்கும் உதவுகிறது. தொண்டையில் தொற்று ஏற்பட்டால் நீக்கி மீண்டும் வராமல் தடுக்கும்
🥗அம்மா சமையல் 🥗

Comments
Post a Comment