கேரட் லட்டு

கேரட் லட்டு

தேவை:


கேரட் துருவல் - 4 கப்
தேங்காய்த் துருவல் - ஒரு கப்
சர்க்கரை - 2 கப்
நெய் - 6 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
முந்திரி, பாதாம் - தலா 10
பாசிப்பருப்பு - 10 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:

வெறும் வாணலியில் பாசிப்பருப்பைச் சேர்த்து வறுத்து, மிக்ஸியில் பவுடராக அரைத்தெடுக்கவும்.

அதே வாணலியில் பாதாம், முந்திரி சேர்த்து லேசாக வறுத்து மிக்ஸியில் ஒன்றிரண்டாகப் பொடிக்கவும்.

அதே வாணலியில் நெய்யை ஊற்றி கேரட் துருவலைச் சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
அதனுடன் தேங்காய்த் துருவல் சேர்த்துச் சிறிது நேரம் வதக்கவும்.

பிறகு சர்க்கரை சேர்த்துக் கிளறி, அடுப்பை சிறு தீயில் வைத்து மூடி போடவும். ஐந்து நிமிடங்கள் கழித்துத் திறந்து, ஏலக்காய்த்தூள் தூவி இறக்கவும்.

நன்கு ஆறியதும் பாசிப்பருப்பு மாவு,  பொடித்த முந்திரி, பாதாம் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

பிறகு லட்டுகளாகப் பிடிக்கவும். மற்ற லட்டுகள் மாதிரி இது நீண்ட நாள்கள் இருக்காது. விரைவிலேயே பயன்படுத்திவிட வேண்டும்.

குறிப்பு: கேரட் பிரகாசமான பார்வைக்கு வழிவகுப்பதுடன் புற்றுநோய் வருவதையும் தடுக்கிறது.

🥗அம்மா சமையல் 🥗


Comments

Popular posts from this blog

Increase Instagram Followers Best App