சுரைக்காய் பொரியல்
சுரைக்காய் பொரியல்
தேவை:
தோல், விதை நீக்கி நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிய சுரைக்காய் - 2 கப்
தக்காளி, வெங்காயம் - தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்)
பொடியாக நறுக்கிய பூண்டு - ஒரு டேபிள்ஸ்பூன்
கடுகு - ஒரு டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
அடிகனமான வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், வெங்காயம், பூண்டு, தக்காளி, உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும். அதனுடன் சுரைக்காய் சேர்த்து வதக்கி மூடி வைக்கவும்.
எட்டு நிமிடங்களில் வெந்துவிடும். பிறகு திறந்து, கொத்தமல்லித்தழை தூவிக் கிளறி இறக்கவும். இதை சாதத்துக்குத் தொட்டுக்கொள்ளலாம்; சப்பாத்திக்கும் தொட்டுக்கொள்ளலாம்.
குறிப்பு:
சுரைக்காய் நீர்ச்சத்து மிகுந்தது. இதில் உள்ள பாஸ்பரஸ்... பற்கள், எலும்புகளுக்குப் பலம் கொடுக்கும். சுரைக்காய் பொரியலை வாரம் மூன்று முறை சாப்பிட்டால், உடல் நன்கு இளைக்கும்.
🥗அம்மா சமையல் 🥗
Comments
Post a Comment