இஞ்சிப் பச்சடி
இஞ்சிப் பச்சடி
தேவை: தோல் சீவி, பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு கப் பச்சை மிளகாய் - 7 (பொடியாக நறுக்கவும்) புளி - எலுமிச்சை அளவு வெந்தயப்பொடி, பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் - தலா கால் டீஸ்பூன் வெல்லம் - ஒன்றரை டேபிள்ஸ்பூன் கடுகு - அரை டீஸ்பூன் காய்ந்த மிளகாய் - 2 கறிவேப்பிலை - சிறிதளவு எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன் உப்பு - தேவையான அளவு.
செய்முறை: புளியைத் தண்ணீரில் ஊறவைத்துக் கரைத்து வடிகட்டவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும். அதனுடன் இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு புளிக்கரைசல், பெருங்காயத் தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். இதில் வெந்தயப்பொடி, வெல்லம் சேர்த்துக் கொதிக்கவிட்டு எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும்.
🥗அம்மா சமையல் 🥗

Comments
Post a Comment