மிளகுக் கஷாயம்

மிளகுக் கஷாயம்

தேவையானவை:

மிளகு, சீரகம், தனியா (மல்லி) - தலா கால் கப்
ஓமம் - 2 டேபிள்ஸ்பூன்
நசுக்கிய சுக்கு, நசுக்கிய சித்தரத்தை - தலா 3 டேபிள்ஸ்பூன்
பனங்கற்கண்டு - 2 டேபிள்ஸ்பூன்


செய்முறை:

வெறும் வாணலியில் மிளகு, சீரகம், தனியா(மல்லி), ஓமம், சுக்கு, சித்தரத்தை ஆகியவற்றை வறுத்து,
4 டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்கவிட்டு, அது இரண்டு டம்ளராக சுண்டியதும் இறக்கவும்.

இதனை வடிகட்டி, பனங்கற்கண்டு சேர்த்து அருந்தலாம். வடிகட்டியவற்றை தனியே எடுத்து வைத்து, அன்று மாலையே மீண்டும் 3 டம்ளர் நீர் விட்டு, அது ஒன்றரை டம்ளராக சுண்டியதும் இறக்கி வடிகட்டி பனங்கற்கண்டு சேர்த்து அருந்தலாம்.

தீர்வு:

சித்தரத்தை, சளியை அறுத்து வெளியே கொண்டுவந்துவிடும். பனங்கற்கண்டு, இருமல் போக்கும். மிளகு, சீரகம், தனியா, ஓமம், பித்தத்தை அகற்றி, செரியாமையை நீக்கும்


🥗அம்மா சமையல் 🥗

Comments

Popular posts from this blog

Increase Instagram Followers Best App