கொத்தமல்லி&புதினா சட்னி

☘கொத்தமல்லி&புதினா சட்னி☘

தேவையான ப்பொருட்கள்.     :

கொத்தமல்லி தழை   : 1 கப்

புதினா.      : 1 கப்

கறிவேப்பிலை.    : சிறிது

புளி.        : சிறிது

பூண்டு.     : 4 பல்

உளுந்து.   : 2 டேபிள்ஸ்பூன்

கடுகு.      : 1 டேபிள்ஸ்பூன்

மிளகாய் வற்றல்.    : 4

தேங்காய் துருவல்.  : 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை.   :

1.ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் உளுந்து ; பூண்டு; மிளகாய் வற்றல்;புளி சேர்த்து நன்றாக வதக்கவும்.

2. பின்னர் சிறிது கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

3. கொத்தமல்லி தழை மற்றும் புதினா இலை போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

4.ஆறியவுடன் தேங்காய் துருவல் மற்றும் வதக்கிய பொருட்கள் மற்றும் உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து கொள்ளவும்.

5.இறுதியாக கடுகு உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கொட்டவும்.

6. இட்லி மற்றும் தோசை யுடன் பரிமாறவும்.

Comments

Popular posts from this blog