பிஸிபெலாபாத் ( சாம்பார் சாதம்)

பிஸிபெலாபாத்
 ( சாம்பார் சாதம்)

எனக்கு ரொம்பவும் பிடித்தமான சாம்பார் சாதம்.

இந்த உணவை நான் சமைத்து பல பேரிடம் பாராட்டு பெற்றுள்ளேன்.

இந்த உணவில் நன்றாக மசியகூடிய காய்கறிகளை சேர்த்து கொள்ளவும்.

அப்பொழுது தான் சுவை கூடும்.
நாட்டு துவரம் பருப்பு உபயோக படுத்தினால் சுவை கூடும்.

பசுநெய்யை மட்டும் உபயோகிக்கவும். பசுநெய்யை உபயோக படுத்த முடியாவிட்டால் வேர்கடலை எண்ணெய்யை உபயோக படுத்தலாம்.

தேவையான பொருட்கள்

துவரம் பருப்பு 3/4 கப்
புது பச்சை அரிசி 3/4 கப்
தண்ணீர் 6 கப்
சுடு தண்ணீர் 1 கப்
பீன்ஸ் 50 கிராம் ( பொடியாக நறுக்கியது )
கத்திரிக்காய் 100 கிராம் ( பொடியாக நறுக்கியது )
உருளைகிழங்கு 50 கிராம் ( பொடியாக நறுக்கியது )
தக்காளி 1/2 ( பொடியாக நறுக்கியது )
சின்ன வெங்காயம் 5 ( பொடியாக நறுக்கியது )
 மசாலா பொடி -தேவையான அளவு
பசு நெய் 3 1/2 மேஜைக்கரண்டி
கடுகு 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை 2 கொத்து
புளி 1 எலுமிச்சை பழ அளவு
துருவிய வெல்லம் 1 மேஜைக்கரண்டி
பிசிபேலா பாத் மசாலா பொடி 3 மேஜைக்கரண்டி
உப்பு தேவையான அளவு
முந்திரி பருப்பு 10
தண்ணீர் 1 கப்

விருப்பமான அல்லது வீட்டிலுள்ள எந்த வகை காய்களையும் சேர்க்கலாம்.

செய்முறை

1. அரிசியையும், துவரம் பருப்பையும் நன்றாக கழுவி குறைந்தது 40 நிமிடங்கள் ஊற வைக்கவும். பிறகு தண்ணிரை முழுமையாக வடித்து விடவும்.

2. காய்கறிகள், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், பொடியாக நறுக்கிய தக்காளி, துவரம் பருப்பு மற்றும் அரிசியை சுத்தமாக கழுவி பிரஷர் குக்கரில் சேர்த்து 6 கப் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்புத்தூளையும் சேர்த்து 6 விசில் விட்டு ஆவி அடங்கியதும் இறக்கவும்.

2. பிறகு அதில் சுடு தண்ணீர் ஊற்றி நன்றாக கரண்டியை கொண்டு மசித்து கொள்ளவும்.

3. புளியை சுடு தண்ணீரில் ஊற வைத்து நன்றாக பிசிறி புளியை கரைத்து கொள்ளவும். புளி கரைசலை தயார் செய்து கொள்ளவும்.

4. இப்பொழுது ஒரு வடச்சட்டியில் 1 தேக்கரண்டி பசு நெய் சூடானதும் அதில் முந்திரி பருப்பு போட்டு நன்றாக பொன்னிறமாக வறுத்து தனியாக வைத்து கொள்ளவும்.

5. ஒரு வடச்சட்டியில் பசுநெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு போட்டு வெடிக்க ஆரம்பித்ததும், அதில் கறிவேப்பில்லை சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு அதில் மிளகு சேர்த்து வறுக்கவும்.

6. அதில் புளி கரைசலை ஊற்றி கொதிக்க வைக்கவும், பின்பு அதில் துருவிய வெல்லத்தை சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும். பிறகு 1 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க ஆரம்பித்ததும் அதில்  மசாலா பொடியையும் , தேவையான அளவு உப்பையும் சேர்த்து நன்கு 5 நிமிடங்கள் வரை கொதிக்க வைக்கவும்.

7. இந்த வடச்சட்டியில் உள்ள கலவையை பிரஷர் குக்கரில் சேர்த்து அடுப்பில் வைத்து நன்றாக கிளறவும். 3-4 நிமிடங்கள் மிகவும் சிறுதீயில் கொதிக்க விட்டு நன்றாக கிளறவும். தனியாக எடுத்து வைத்துள்ள பசுநெய்யில் வறுத்த முந்திரி பருப்பை பிரஷர் குக்கரில் சேர்த்து நன்றாக கிளறவும்.

7. இச்சமயத்துல ஒரு வடச்சட்டியில் ஒரு தேக்கரண்டி பசு நெய் விட்டு காய்ந்ததும் அதில் பொடியாக நறுக்கி அம்மிகல்லில் நசுக்கிய 3 சின்ன வெங்காயம், சிறிது சீரகம், 4 பொடியாக நறுக்கிய கறிவேப்பில்ல , நன்கு அம்மிகல்லில் தட்டிய 3 பூண்டு பற்கள் விட்டு தாளித்து அதை பிரஷர் குக்கரில் சேர்த்து நன்றாக கிளறி கொள்ளவும்.

குறிப்பு

1. மேலும் அலங்கரிக்க இலையில் பிசிபேலா பாத்தை வைத்து அதன் மேல் காராபூந்தியை போட்டு, மேலும் அதனுடன் பசுநெய்யில் வறுத்த வேர்கடலையை தூவி சாப்பிட்டால் ருசி கூடும்.

2. பொரித்த அப்பளம்/வடவம் அல்லது சிப்ஸ் ஆகியவற்றுடன் சூடாக பரிமாறவும்

🥗அம்மா சமையல் 🥗

Comments

Popular posts from this blog

Increase Instagram Followers Best App