ஆந்திரா தயிர் சாதம்

ஆந்திரா தயிர் சாதம்

சமையல் கலை சுப்பையா நாயுடு வின் ஸ்பெசல் தயிர் சாதம். இந்த தயிர் சாதம் இன்றும் சென்னை வேளச்சேரி புகழ் சிக்கன் அன் ரோஷ்ட் உணவகத்தில் இன்றும் கிடைக்கும்.

தேவையான பொருட்கள்:
தயிர் - ஒரு மேசைக்கரண்டி
பால் - ஒன்றரை கப்
அரிசி - ஒரு கப்
தண்ணீர் - ஒன்றரை கப்
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
மிளகு - 1/2 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - ஒன்று
வரமிளகாய் - 4
இஞ்சி துருவியது - 1/2 தேக்கரண்டி
கொத்தமல்லி - ஒரு மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - 5 இலை
வெண்ணெய் - ஒரு தேக்கரண்டி
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
மரசெக்கு கடலெண்ணய் - 2 தேக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி

செய்முறை


1.அரிசியை ஒன்றரை கப் பால் மற்றும் ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி குக்கரில் வேகவைத்து எடுத்து ஆற வைத்து கொள்ளவும்.

2. ஒரு வடச்சட்டியில் மரசெக்கு கடலெண்ணய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், பெருங்காயம் மற்றும் மிளகு போட்டு கடுகு வெடித்ததும் கறிவேப்பிலை, இஞ்சி, வர மிளகாய், மஞ்சள் தூள் மற்றும் வெங்காயம் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.

3.பிறகு வேகவைத்து எடுத்து வைத்துள்ள சாதத்தில் போட்டு கலக்கவும்.


4. பிறகு தயிர், வெண்ணெய், உப்பு மற்றும் கொத்தமல்லி சேர்த்து மூன்று மணி நேரம் வைத்து பிறகு உபயோகிக்கவும்.

Comments

Popular posts from this blog

Increase Instagram Followers Best App