Posts

Showing posts from August, 2018

ராகி ஆலு பரோட்டா

Image
ராகி ஆலு பரோட்டா தேவையான பொருள்கள். கோதுமை மாவு - அரை கப் ராகி மாவு -  அரை கப் உப்பு - தேவையான அளவு ஸ்டஃப்பிங்க்கு... உருளைக்கிழங்கு - 1 கரம்மசாலாத்தூள் - அரை ஸ்பூன்♡உப்பு, எண்ணெய் - தேவையான அளவு பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2  ஸ்பூன் ஒமம் - கால் ஸ்பூன்♡ செய்முறை கோதுமை மாவு ராகி மாவு இரண்டையும் உப்பு  சேர்த்து  சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து அரைமணி நேரத்திற்கு மூடி ஊற விடவும். ♤ உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து மசித்துக் கொள்ளவும். உப்பு, கரம்மசாலாத்தூள், கொத்தமல்லித்தழை, ஒமம் சேர்த்து கிளறவும். ♤♤ மாவை சமஅளவு உருண்டைகளாக பிரித்து உருட்டி, பூரி அளவிற்கு திரட்டி உருளைக் கலவையை வைத்து நன்றாக மூடி கையால் தட்டி மெதுவாக திரட்டவும். ♤♤ சூடான தோசைக் கல்லில்  பரோட்டாவை  சிறிதளவு  எண்ணெய்  விட்டு  2  பக்கமும் திருப்பி போட்டு  வேக வைத்து எடுக்கவும்.♤♤ சுவையான ராகி ஆலு பரோட்டா ரெடி😛😪😪

உருளைக்கிழங்கு மசாலா

Image
🥔உருளைக்கிழங்கு மசாலா🥔 தேவையான ப்பொருட்கள்.    : வேகவைத்த உருளைக்கிழங்கு.     : 3 வெங்காயம்.      : 3 (நீளவாக்கில் நறுக்கவும்) பச்சை மிளகாய்.  :2(நீளவாக்கில் நறுக்கவும்) இஞ்சி.     : சிறிது (பொடியாக நறுக்கவும்) கடுகு.      : 1 தேக்கரண்டியளவு உளுந்து.   :1 தேக்கரண்டியளவு மிளகு.   : 1தேக்கரண்டியளவு மஞ்சள் தூள்.    :1/2 தேக்கரண்டியளவு கறிவேப்பிலை.  : சிறிது கொத்தமல்லி.    : சிறிது செய்முறை.    : 1.ஒரு கடாயில் இரண்டு டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு மிளகு பச்சை மிளகாய் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். 2.வெங்காயம் நிறம் மாறாமல் சிறிது நேரம் வதக்கவும். 3.பிறகு வேகவைத்த உருளைக்கிழங்கை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி சேர்த்து நன்றாக கலக்கவும். 4.மஞ்சள்தூள் மற்றும் தேவையான உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். 5.கெட்டிபதம் வந்ததும் கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.