திருநெல்வேலி_அல்வா

திருநெல்வேலி_அல்வா...

தேவையானபொருள்கள்...


சம்பா கோதுமை – 200 கிராம்
சர்க்கரை – 750 கிராம்
நெய் – 400 கிராம்

முதலில் சம்பா கோதுமையை எடுத்து நன்றாக சுத்தம் செய்த பின் , தண்ணீரில் முதல் நாளே ஊறவைக்க வேண்டும். பின்பு கிரைண்டரில் நல்ல நைசாக அரைக்க வேண்டும். அது நன்றாக அரைக்க அரைக்க கோதுமை பாலாக வர ஆரம்பிக்கும். அதன் பின் அதை ஒரு துணியில் வடிகட்ட வேண்டும். அந்த பாலை நல்ல கனமான வாணலியில் சூடாக்க  வேண்டும். பால் லேசாகச் சூடானதும், சர்க்கரைச் சேர்த்துக் கிளற ஆரம்பிக்க வேண்டும்.

அதன் பின் கலவை கொதித்து, இறுகி, கெட்டியான பதத்திற்கு வரும்போது, சுத்தமான நெய்யைச் சேர்த்துக் கிளற வேண்டும். இறுதி வரை நாம் அந்த கலவை விடாமல் கிளறிக்கொண்டே இருக்கவேண்டும்.  சிறிது நேரத்தில் அல்வா நல்ல குங்குமச் சிவப்பு  நிறமாக மாறும். அல்வா நன்கு இறுகலான பக்குவத்தில், மற்றும்  பாத்திரத்தில் ஒட்டாமல் வந்ததும், அடுப்பில் இருந்து இறக்கி, நெய் தடவிய தட்டில் கொட்டிப் பரத்தி, ஆறவைத்தவுடன் சுவையான அல்வா ரெடி...

Comments

Popular posts from this blog

கறிவேப்பிலை ஜூஸா? அடேங்கப்பா ! குடிச்சா இவ்வளவும் நடக்குமா?

திருநெல்வேலி அல்வா வரலாறு..!!