இந்தியாவில் Pubg சர்வர் எப்போது நிறுத்தப்படும்? நிறுத்தப்படுமா !! Pubg Back to India Soon
Pubg செயலி தடை செய்யப்பட்ட பிறகும் அதன் சர்வர் இயங்கிக்கொண்டிருப்பதால் பயனர்கள் விளையாடி வருகின்றனர்.
Pubg உள்ளிட்ட 118 சீன செயலிகளை இந்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கடந்த 2 ஆம் தேதி தடை செய்தது. அதன் தொடர்ச்சியாக இன்று மேற்கண்ட செயலிகள் பிளேஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. எனினும், ஏற்கெனவே பப்ஜியை பதிவிறக்கம் செய்துள்ள பயனர்கள் பப்ஜி விளையாடுவதில் எந்த பிரச்சினையும் இதுவரை ஏற்படவில்லை.
அதற்கு காரணம், பிளேஸ்டோரில் இருந்து பப்ஜி உள்ளிட்ட செயலிகள் நீக்கப்பட்டதே தவிர ,சர்வர் இன்னும் இயங்கிக்கொண்டிருக்கிறது. அதுவும் எப்போது துண்டிக்கப்படும் என தெரியவில்லை. பப்ஜி பிரியர்களுக்கு ஆதரவு தரக்கூடிய செய்தி என்னவென்றால், அமைச்சகம் பப்ஜி மொபைல் செயலியை மட்டுமே தடை செய்துள்ளது. ஆனால், பப்ஜி பிசி மற்றும் பப்ஜி கன்சோல் வெர்சன் ஆகிய இரண்டை தடை செய்யவில்லை.
ஏனென்றால், பப்ஜி மொபைல் மற்றும் பப்ஜி லைட் இந்த இரண்டு வெர்சன்களையும் சீனாவை சேர்ந்த டென்சட் கேம்ஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டவை. பப்ஜி பிசி வெர்சன் மட்டும் கொரியாவிலுள்ள புளூஹோல்ஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு அதன் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்த வெர்சனின் சர்வர் கொரியாவின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதால் சீனாவின் டென்சட் கேம்ஸ் அதனை தடை செய்ய அதிகாரம் கிடையாது. ஆனால், மேற்கண்ட கொரியா வெர்சன் சர்வர்களை விளையாட கட்டணம் செலுத்த வேண்டுமென கூறப்படுகிறது.
பப்ஜி கேம் தடை செய்யப்பட்டாலும் அதன் சர்வர் இன்னும் இந்தியாவில் வேலை செய்துதான் வருகிறது. ஆனால், அதுவும் தற்காலிகமான ஒன்றுதான். ஹெலோ, டிக்டாக் வரிசையில் தடை அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து ஒரு வாரத்திற்குள் சர்வர் முழுமையாக துண்டிக்கப்படலாம்.
Comments
Post a Comment