Google Pay உண்மையில் பாதுகாப்பானது தானா? ஆன்லைனில் நம்பி பணம் அனுப்பலாமா?



கூகிள் பே பயன்பாடு பாதுகாப்பானது இல்லை என்றும், கூகிள் பே பயன்பாட்டின் மூலம் செய்யப்படும் பண பரிவர்த்தனைகள் பாதுகாப்பானது இல்லை என்றும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. உண்மையில் கூகிள் பே மூலம் நாம் செய்யும் பரிவர்த்தனைகள் பாதுகாப்பானது தானா? என்ற சந்தேக கேள்விகளுக்கான பதில் இந்த பதிவில் உள்ளது.


ஆன்லைனில் நம்பி பணம் அனுப்பலாமா?

ஒரு காலத்தில் மக்கள் கையில் உள்ள பணத்தைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள நேரடியாக வங்கிகளுக்குச் சென்று பணத்தைச் சேமித்து வைப்பதும், தேவைக்கு ஏற்ற நேரத்தில் பணத்தை எடுக்க வங்கிக்கு நேரில் சென்று வரும் நிலையே நிலவி வந்தது. ஆனால், பல நேரங்களில் இந்த செயல்முறை அனைவருக்கும் சிக்கலான ஒன்றாக இருந்தது. குறிப்பாக நீங்க வரிசையில் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது.

ஆன்லைன் மயமாக்கப்பட்ட வங்கி சேவைகள்

மக்களுக்கு ஏற்படும் சிரமத்தைக் கருத்தில் கொண்டு, ஆன்லைன் பரிவர்த்தனை முறை அறிமுகம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து மக்கள் ஏடிஎம் சென்று பணம் டெபாசிட் செய்யும் முறை, மொபைல் பேங்கிங், நெட் பேங்கிங், ஆன்லைன் பேங்கிங் என்று அனைத்து சேவைகளும் ஆன்லைன் மயமாக்கப்பட்டது. இந்த ஆன்லைன் சேவைகளை மக்கள் பெரிதும் வரவேற்றனர். அடுத்தகட்டமாக வங்கிகள் மொபைல் ஆப்ஸ் மூலம் தனது சேவையை பிரத்தியேகமாக வழங்கத் துவங்கியது.

மொபைல் ஆப்ஸ் மூலம் வங்கி சேவைகளை வழங்கிய கூகிள் பே

ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரித்ததும், தனியார் நிறுவனங்கள் வங்கிகளுடன் இணைந்து பல சலுகைகளுடன் வங்கி பரிவர்த்தனைகளை மொபைல் ஆப்ஸ் மூலம் செய்யத் துவங்கியது. இருந்த இடத்திலிருந்து வெகு எளிதாக சில நொடிகளில் பணப் பரிமாற்றத்தை இந்த மொபைல் பயன்பாடுகள் செய்துமுடித்தது. செய்யும் பரிவர்த்தனைக்கு ஏற்றார் போலப் பரிசுகளையும் இந்த நிறுவனங்கள் வழங்கத் துவங்கியது. இதில் முன்னோடியாகத் திகழ்ந்த மொபைல் ஆப்ஸ் தான் கூகிள் பே.

கூகிள் பே பாதுகாப்பானது இல்லை!

கூகிள் பே பயன்பாட்டில் பண பரிவர்த்தனை மட்டுமின்றி ரீசார்ஜ், மின் கட்டணம், ரயில் டிக்கெட்டிற்கான முன்பதிவு, பஸ் டிக்கெட் முன்பதிவு போன்ற பல சேவைகளை ஒரே இடத்தில் கிடைக்கும் படி கூகிள் நிறுவனம் செய்தது. இதனால் வங்கிச் சேவைகளை விட கூகிள் பே சேவையை மக்கள் பெரிதும் பயன்படுத்தத் துவங்கினர். ஆனால், சமீபத்தில் கூகிள் பே பாதுகாப்பானது இல்லை என்ற செய்தி பரவி பயனர்களிடையே பெரிய அச்சத்தை உருவாக்கியது.

கூகிள் நிறுவனம் கொடுத்த விளக்கம்

கூகுள் பே மூலம் செய்யப்படும் சில பரிவர்த்தனைகள் சரியாக மேற்கொள்ளப்படாமல் பல புகார்களைச் சந்தித்தது. இதனால், கூகிள் பே பரிவர்த்தனைகள் பாதுகாப்பானது இல்லை என்று சமூக வலைத்தளங்களில் செய்திகள் வந்தன, இதற்குக் கூகிள் பே நிறுவனம் தற்பொழுது விளக்கமளித்துள்ளது. கூகிள் பே பரிவர்த்தனைகள் அனைத்தும் மத்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி, சரியான வழிமுறைகளுடன் மட்டுமே நடைபெறுகின்றது என்று கூகிள் தெரிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கி கூறிய தகவலை சுட்டிக்காட்டிய கூகிள்

கூகிள் பே இன் பரிவர்த்தனைகள் அனைத்தும், 2007 பரிவர்த்தனைச் சட்டத்தின் கீழ் அங்கீகாரம் பெற்ற பிறகே நடைபெறுகிறது என்று சமீபத்தில் ரிசர்வ் வங்கி கூறிய தகவலையும் கூகிள் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. கூகிள் பே மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகள் அனைத்தும் பாதுகாப்பானது தான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Comments

Popular posts from this blog

Increase Instagram Followers Best App