ZOOM App ஆபத்தானது.. பாதுகாப்பு கிடையாது.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு
இந்தியர்கள் இடையே தற்போது வைரலாக பரவி வரும் ஃஸூம் (ZOOM) செயலி பாதுகாப்பானது கிடையாது, அதில் நிறைய குறைபாடுகள் உள்ளது என்று மத்திய அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. டெல்லி: இந்தியர்கள் இடையே தற்போது வைரலாக பரவி வரும் ஃஸூம் (ZOOM) செயலி பாதுகாப்பானது கிடையாது, அதில் நிறைய குறைபாடுகள் உள்ளது என்று மத்திய அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்தியா முழுக்க கொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் பலரும் வீட்டில் இருந்து வேலை பார்த்து வருகிறார்கள். இவர்கள் எல்லோரும் அலுவலக மீட்டிங் மற்றும் ஆலோசனைகளை ஃஸூம் (ZOOM) செயலி மூலம் நடத்துகிறார்கள். ஃஸூம் (ZOOM) செயலி என்பது ஒரு வீடியோ கான்பிரன்ஸ் செயலி ஆகும். இதிரத்தில் 200 பேர் வரை வீடியோ கான்பிரன்ஸ் செய்ய முடியும். அலுவலகங்களில் மட்டுமின்றி பள்ளிகளிலும் கூட மாணவர்களுக்கு ஃஸூம் (ZOOM) செயலி மூலம் பாடம் எடுக்கப்படுகிறது. ஹேக்கிங் நடந்தது இந்த நிலையில்தான் ஃஸூம் (ZOOM) செயலியில் சில வாரங்கள் முன் ஹேக்கிங் நடந்தது. உலகம் முழுக்க மொத்தம் 60 ஆயிரம் கணக்குகள் வரை இதில் ஹேக் செய்யப்பட்டது. இந்த கணக்குகள் எல்லாம் ஹேக்கர்க