சமையல் டிப்ஸ்
இந்த கட்டுரை PDF file வேண்டும் என்றால் கிலே உள்ள லிங்க் மூலம் டவுன்லோட் செய்து கொள்ளவும் Download 🥗 அம்மா சமையல் 🥗 டிப்ஸ்... டிப்ஸ்... கடலை மாவு, சீயக்காய்த்தூள் இரண்டையும் கலந்து... வெள்ளி, பித்தளைப் பாத்திரங்களைத் துலக்கினால், அவை பளபளக்கும்! தேங்காயும் பருப்பும் இல்லாமல் ஒரு திடீர் கூட்டு’ செய்யலாமா..? ஒரு டம்ளர் பாலில் 3 ஸ்பூன் கடலை மாவு, 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய், ஒரு ஸ்பூன் பொடித்த சீரகம், அரை ஸ்பூன் மிளகாய்த்தூள், கால் ஸ்பூன் மஞ்சள்தூள், சிறிது பெருங்காயத்தூள், உப்பு சேர்த்துக் கலந்துகொள்ளுங்கள். இந்தக் கலவையை வேகவைத்த காய்கறிகளுடன் சேர்த்து கொதிக்கவிட்டு,... கடுகு, கறிவேப்பிலை, உளுத்தம்பருப்பு தாளித்தால், சுவையான கூட்டு தயார்! பகளாபாத் தயாரிக்க சாதம் வேகவைக்கும்போது, ஒரு ஆழாக்கு அரிசிக்கு ஒரு டேபிள்ஸ்பூன் ஜவ்வரிசி வீதம் கலந்தால் சாதம் குழைவாக இருக்கும். சரியாக லட்டு பிடிக்க வரவில்லையா..? சிறிதளவு கோவாவை பூந்தியில் சூட்டோடு கலந்து பிடித்தால், லட்டு அருமையாக வரும். பால் சுவையுடன் லட்டு மேலும் ருசியாக இருக்கும். குத்துவிளக்கை முதலில் பழைய ச