வாக்கிங், ஜாக்கிங், ஜிம் போவதற்குமுன் என்ன சாப்பிடலாம்? என்ன சாப்பிடக்கூடாது?



ஓட்டப்பயிற்சி என்பது ஒரு வகை விளையாட்டு அல்லது உடற்பயிற்சி மட்டும் அல்ல. ஓட்டப்பயிற்சி மேற்கொள்வதை லட்சியமாக வைத்து பயிற்சி செய்பவர்களும் உண்டு. இது ஒரு புறம் இருந்தாலும், ஓட்டப்பயிற்சி மேற்கொள்வதற்கு முன்னர் என்ன சாப்பிடலாம் என்பது குறித்த ஒரு குழப்பம் பலருக்கும் உண்டு.


Here is a Complete Guide to your Ideal pre-run Diets
அதிக உணவு சாப்பிட்டவுடன் ஓட்டப்பயிற்சி செய்வதால் உங்கள் வயிறு கனமாக இருந்து ஒரு வித வலி உண்டாகும். சாப்பிடாமல் அல்லது மிகக் குறைந்த அளவு சாப்பிட்டு விட்டு ஓட்டப்பயிற்சி செய்வதால் இரண்டு மைல் ஓடியவுடன் உங்கள் மூட்டுகள் பிண்ணிக் கொண்டு வலி உண்டாகும்.

*சரியான உணவு*

சரியான உணவு சீரான ஓட்டப்பயிற்சிக்கு துணை நிற்கும். ஓட்டப்பயிற்சிக்கு உறுதுணையாக நிற்கும் ஊட்டச்சத்துகள் அடங்கிய உணவை எடுத்துக் கொள்வது மிகவும் நலன் பயக்கும். உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் ஓட்டப்பயிற்சி செய்பவர்கள் சரியான உணவு அட்டவனையை மேற்கொள்வதால் உங்கள் குறிக்கோளை எளிதில் அடைய முடியும்.

*ஜாக்கிங்*

ஓட்டப்பயிற்சிக்கு முன் எடுத்துக் கொள்ள வேண்டிய ஒரு உணவு ஊட்டச்சத்து அதிகம் உள்ளதாகவும், ஓடுவதற்கு ஆற்றலைத் தரும் உணவாகவும் இருக்க வேண்டும். அதற்கான ஒரு வழிகாட்டியாக இந்த பதிவு உள்ளது. இதில் ஓட்டப்பயிற்சிக்கு முன் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவு அட்டவணை கொடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து படித்து பயன் அடையுங்கள்.

 *ஓட்டப்பயிற்சிக்கு முன்*

ஓட்டப்பயிற்சி செய்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னதாக எதாவது சாப்பிடலாம். குறிப்பாக, அந்த உணவு போதுமான அளவு கலோரிகள், குறைந்த நார்ச்சத்து, குறைந்த கொழுப்பு கொண்ட உணவாக இருக்க வேண்டும். அத்தகைய உணவே சிறப்பானதாக கருதப்படுகிறது. ஆனாலும், கலோரி அளவில் குறிப்பிட்ட கவனம் செலுத்தி மிதமான கலோரி அளவு கொண்ட உணவை உட்கொள்வது மிகவும் பலனளிக்கக் கூடியதாக உள்ளது.

 *ஆப்பிள் ஜூஸ் ஆப்பிள் ஜூஸ் அல்லது ஆப்பிள் சாஸ்*

ஒரு சிறிய கிண்ணம் அளவு ஆப்பிள் சாஸ் அல்லது ஒரு கிளாஸ் ஆப்பிள் ஜூஸ் ஒரு சிறந்த தேர்வாக கருதப்படுகிறது. நீண்ட தொலைவு ஓட்டப்பயிற்சி செய்ய , ஜூஸில் போதுமான அளவு சர்க்கரை சேர்ப்பது நல்லது. செர்ரி, குருதி நெல்லி அல்லது வேறு எதாவது ஜூஸ் கூட குடிக்கலாம். குறிப்பாக குவேர்சிடின் என்னும் அன்டி ஆக்சிடென்ட் உள்ள ஜூஸ் குடிப்பது நல்லது.

இருப்பினும் ஓட்டப்பயிற்சி மேற்கொள்பவர்களில் சிலர், ஜூஸ் பருகிவிட்டு பயிற்சி மேற்கொள்வதால், இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதின் காரணமாக, சிறிது நேரத்திற்கு பிறகு பயிற்சியில் தொய்வு ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர். இதனைத் தவிர்க்க பாதாம் அல்லது வேக வைத்த முட்டை எடுத்துக் கொள்வதால் சர்க்கரை உறிஞ்சுவதில் காலதாமதம் உண்டாகிறது. இவற்றில் உள்ள அதிக அளவு புரதம் உடலில் சர்க்கரை உறிஞ்சப்படுவதை தாமதம் செய்கிறது

 *உலர் திராட்சை,*
*பேரிச்சை, அத்திப்பழம்*

ஓட்டப்பயிற்சி மேற்கொள்ளும்போது அதிகமான அளவு உலர் திராட்சை, பேரிச்சம் பழம் மற்றும் அத்திப் பழங்களை எடுத்துக் கொள்ளலாம். இவை உடனடி கலோரிகளைத் தந்து மேலும் சில நுண் ஊட்டச்சத்துகளைத் தருவதாக உள்ளன. இந்த வகை நுண் ஊட்டச்சத்துகளுக்காக பல வீரர்கள் எனர்ஜி பார்களை எடுத்துக் கொள்கின்றனர். ஆனால் நட்ஸ் இந்த நுண் ஊட்டச்சத்துகளை அதிக அளவில் கொடுக்கின்றன.

ஓட்டப்பயிற்சிக்கு இந்த நுண் ஊட்டச்சத்துகள் மிகவும் அவசியம். இந்த வகை நுண் ஊட்டச்சத்துகளுடன் சேர்த்து ப்லவனைடு, அன்டி ஆக்சிடென்ட், பாலி பினாலிக், இரும்பு, பொட்டாசியம், கால்சியம், மற்றும் மெக்னீசியம் போன்றவற்றையும் உலர் திராட்சை, பேரிச்சை மற்றும் அத்தி பழங்கள் கொண்டுள்ளன.

 *நட்ஸ் பட்டர்*

நீண்ட தூரம் ஓட்டப்பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படுவதற்கு புரதம் மற்றும் கொழுப்பு அவசியம். நட்ஸ் பட்டர் மற்றும் தேன் சேர்க்கப்பட்ட சில வகை அரிசி கேக் விரைவான கார்போ சத்து மற்றும் தாமதமாக எரியும் கொழுப்பு சத்து ஆகியவற்றைத் தருகின்றது. அரிசி கேக்குக்கு மாற்றாக வெள்ளை பிரட் கூட எடுத்துக் கொள்ளலாம்.

 *காபி*

நீங்கள் காபி பிரியராக இருந்தால் ஒரு கப் எஸ்ப்ரஸோ ஒரு சிறந்த உணவாகும். உங்களுக்கு காபி பிடிக்காது அல்லது காபின் உங்களுக்கு ஒவ்வாமையை உண்டாக்கும் பட்சத்தில் இதனை தவிர்ப்பது நல்லது.

 *நல்ல தூக்கம்*

காலையில் ஓட்டப்யிற்சி மேற்கொள்வதற்கு முன்னர் இரவு 8 மணி நேர தூக்கம் மிகவும் அவசியம். தூக்கத்தில் குறைபாடு தோன்றுவதால் காலையில் சோர்வு உண்டாகி ஓட்டப்பயிற்சி தடை படலாம். காலையில் ஆற்றலுடன் திகழ இரவில் சிறந்த முறையில் உறங்குவது அவசியம்


Comments

Popular posts from this blog

Increase Instagram Followers Best App