Posts

Showing posts from November, 2018

எல்லோரும் அறிந்திக்க வேண்டிய பயன்தரும் 138 வீட்டுக் குறிப்புகள்:!!

Image
PDF வேண்டும் என்றால் கிலே உள்ள லிங்க் முகமாக  டவுன்லோட் செய்து கொள்ளவும் Download pdf 1. வெள்ளி ஆபரணங்களுடன் சிறிது கற்பூரத்தைப் போட்டு வைப்பதால் வெள்ளி ஆபரணங்கள் கறுப்பாவதைத் தடுக்கலாம். 2. வீட்டில் எறும்புப் புற்று இருந்தால் அங்கே கொஞ்சம் பெருங்காயத் தூளைத் தூவிவிட்டால் எறும்புத் தொல்லை இருக்காது. 3. ஒரு டம்ளர் தண்ணீரில் நான்கு ஸ்பூன் டேபிள் உப்பு கலந்து அதை அறையின் நான்கு பக்க ஓரங்களில் தெளித்துவிட்டால் எறும்பு நடமாட்டம் இருக்காது. 4. குத்துவிளக்கு, காமாட்சி அம்மன் விளக்கின் மேல் நுனியில் ரப்பர் பேண்டைச் சுற்றிப் பூ வைத்தால் கீழே விழாது. 5. துணிகளில் எண்ணெய் கறையோ, கிரீஸ் தாரோ பட்டு விட்டால் அவற்றைத் துவைக்கும் போது சில சொட்டுக்கள் நீலகிரித் தைலம் விட்டுக் கழுவினால் கறைகள் போய்விடும். 6. எவர்சில்வர் பாத்திரங்கள் நாளடைவில் பளபளப்பு மங்கினால் வாரத்துக்கு ஒரு முறை விபூதியைக் கொண்டு நன்கு தேய்த்து வாருங்கள். வெள்ளிப் பாத்திரங்கள் போல் மின்னுவதைப் பார்க்கலாம். 7. கோடை காலத்தில் மதிய உணவில் வெஜிடபிள் சாலட் அவசியம் சேர்க்க வேண்டும். அதிக எண்ணெயில் பொரித்த உணவு வகைகளைத்

நிமிடம் மசாஜ் செய்ய, கை, கால், முகத்தில் உள்ள முடி மாயமாய் மறையும்!

Image
உலகில் உள்ள பல பெண்கள் சந்திக்கும் ஒரு பொதுவான அழகு சம்பந்தப்பட்ட பிரச்சனை கை, கால், முகத்தில் அசிங்கமாக முடி இருப்பது. பெண்களுக்கு கை, கால் மற்றும் முகத்தில் முடி வளர்வதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள், முறையற்ற மாதவிடாய் சுழற்சி, குறிப்பிட்ட மருந்து மாத்திரைகள் போன்றவை குறிப்பிடத்தக்கவை. கை, கால், முகத்தில் இருக்கும் முடியை நீக்குவதற்கு ஏராளமான வழிகள் உள்ளன. அதில் வேக்ஸிங், லேசர் ஹேர் ரிமூவல், எலக்ரோலைசிஸ் போன்றவை பெரும்பாலான பெண்களால் தேவையற்ற முடியை நீக்க பயன்படுத்தும் வழிகள் ஆகும். இந்த முறைகளை அழகு நிலையங்களுக்கு சென்று அதிக பணம் செலவழித்து பெண்கள் செய்வார்கள். ஆனால் சருமத்தில் உள்ள முடியை நீக்குவதற்கு ஏராளமான இயற்கை வழிகள் உள்ளன. முக்கியமாக இயற்கை வழிகளைப் பின்பற்றுவதால் எவ்வித பக்கவிளைவும் இருக்காது மற்றும் சருமமும் ஆரோக்கியமாக இருக்கும். இங்கு சருமத்தில் உள்ள முடியைப் போக்கும் அற்புத வழிகள் கொடுக்கப்பட்டுள்ளது. 1 டேபிள் ஸ்பூன் அயோடின் 2% மற்றும் 1 கப் பேபி ஆயிலை ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும். பின் அதை முடி உள்ள கை, கால் பகுதிகளில் தடவி 5 நிமிடம

வாக்கிங், ஜாக்கிங், ஜிம் போவதற்குமுன் என்ன சாப்பிடலாம்? என்ன சாப்பிடக்கூடாது?

Image
ஓட்டப்பயிற்சி என்பது ஒரு வகை விளையாட்டு அல்லது உடற்பயிற்சி மட்டும் அல்ல. ஓட்டப்பயிற்சி மேற்கொள்வதை லட்சியமாக வைத்து பயிற்சி செய்பவர்களும் உண்டு. இது ஒரு புறம் இருந்தாலும், ஓட்டப்பயிற்சி மேற்கொள்வதற்கு முன்னர் என்ன சாப்பிடலாம் என்பது குறித்த ஒரு குழப்பம் பலருக்கும் உண்டு. Here is a Complete Guide to your Ideal pre-run Diets அதிக உணவு சாப்பிட்டவுடன் ஓட்டப்பயிற்சி செய்வதால் உங்கள் வயிறு கனமாக இருந்து ஒரு வித வலி உண்டாகும். சாப்பிடாமல் அல்லது மிகக் குறைந்த அளவு சாப்பிட்டு விட்டு ஓட்டப்பயிற்சி செய்வதால் இரண்டு மைல் ஓடியவுடன் உங்கள் மூட்டுகள் பிண்ணிக் கொண்டு வலி உண்டாகும். *சரியான உணவு* சரியான உணவு சீரான ஓட்டப்பயிற்சிக்கு துணை நிற்கும். ஓட்டப்பயிற்சிக்கு உறுதுணையாக நிற்கும் ஊட்டச்சத்துகள் அடங்கிய உணவை எடுத்துக் கொள்வது மிகவும் நலன் பயக்கும். உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் ஓட்டப்பயிற்சி செய்பவர்கள் சரியான உணவு அட்டவனையை மேற்கொள்வதால் உங்கள் குறிக்கோளை எளிதில் அடைய முடியும். *ஜாக்கிங்* ஓட்டப்பயிற்சிக்கு முன் எடுத்துக் கொள்ள வேண்டிய ஒரு உணவு ஊட்ட