வெள்ளப்படுதல் (Leucorrhea)
வெள்ளப்படுதல் (Leucorrhea)
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
வெள்ளைப்படுகின்ற காலத்தில் பெண்கள் தங்களைத்தாங்களே வெறுத்துக்கொள்கின்ற நிலை உருவாகிவிடுகின்றது. அதனை சுத்தப்படுத்திக்கொள்ளக்கூட அசிங்கப்பட்டு ஒடுங்கிக்கிடக்கும் மன நிலைக்குத் தள்ளப்படுகின்றார்கள் என்றால் அது மிகையாகாது.
இந்த நிலையில் உடலுறவு கொள்ளும் ஆண்கள் மனைவியை வெறுத்துப்பேசும் மன நிலைக்கு சென்று விடுகின்றார்கள். சிலருக்கு துர் நாற்றம் வேறு. சித்தரவதைதான்.
1. வெள்ளையோனிக்கு ஆனை நெருஞ்சி
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
இந்த பழமொழி ஆனை நெருஞ்சியின் மகத்துவத்தினை மக்களுக்கு உணர்த்துகின்றது. இதன் இலை, காம்பு, காய் இவைகளை சற்றே நசுக்கி பசும்பால் அல்லது நீரில் கலந்து கையினால் சிறிது நேரம் சுற்றிச் சுற்றித் துழாவிக்கொண்டிருந்தால், ஒரு விதமான குழகுழப்பான திரவமாக வெளிப்பட்டு, பிசுபிசுப்பான திரவம் உண்டாகும். இதனுடன் பனைவெல்லம் கலந்து குடிக்க வெள்ளைப்படுதல் பெண்களுக்கு நிற்கும். ஆண்களுக்கு நீர்க்கடுப்பு, கனவில் விந்து வெளியேறல் நீங்கும்.
பசும்பாலைவிட வெள்ளாட்டுப்பால் கிடைத்தால் மிகவும் சிறப்பு. இவ்வாறு கரைத்து குழகுழப்பான திரவத்தினை தினமும் குடித்துவர வெள்ளைப்படுதல், நீர்க்கடுப்பு நீங்கும்.
இதன் இலையை மட்டும் சூரணம் செய்து உணவுக்கு பின்பு 1 கிராம் வீதம் 3 வேளைகள் தினமும் பாலுடன் குடித்து வர வெள்ளைப்பாடு நீங்கும்.
முழுச்செடியையும் கழுவி மைபோல அரைத்து எருமைத்தயிருடன் பாக்களவு, தினமும் காலையில் 3 நாட்கள் சாப்பிட வெள்ளைப்பாடு நீங்குவதோடு, நீர் எரிச்சல்,தேக எரிச்சல் நீங்குவதோடு, இது சிறு நீரை வெளியேற்றுவதோடு சிறு நீரகத்தினை காக்கவும் கூடிய மிகச்சிறப்பான முலிகை ஆகும்.
2. பிரண்டை
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
முற்றிய பிரண்டைச் சாறு எடுத்து சம அளவு விளெக்கெண்ணெய் கலந்து குடித்து வருவது வெள்ளைப்பாட்டினை குணமாக்கும். பிரண்டைத் துவையல் தினமும் சேர்த்துவர வெள்ளைப்பாடு கட்டுப்படும்.
3. துத்தி
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
துத்திப்பொடி மிகச்சிறந்த உடல் தேற்றி, இப்பொடியுடன் பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டுவர உள்சூடு, மேகச்சூடு வெள்ளைப்படுதல் குணமாகும்.
4. கடுக்காய்
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
விதை (கொட்டை) நீக்கப்பட்ட கடுக்காய் 10 எடுத்து 1 லிட்டர் நீரில் நன்கு கொதிக்க வைத்து அதன் சூடு ஆறிய பின்பு பெண் குறியை கழுவ வேண்டும். முதலில் சற்று கூடுதலான எரிச்சல் இருக்கும். அடுத்த நாள் எரிச்சல் குறையும். இவ்வாறு இரண்டு அல்லது மூன்று நாட்கள் கழுவிவர பெண்குறியில் வெள்ளைப்படுதலினாலான பெண்குறிப்புண், நமைச்சல் தீர்ந்துவிடும்.
5. வெள்ளை அருகு
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
இதன் இலையை அரைத்து இரண்டு சுண்டக்காய் அளவு மோர் கலந்து சாப்பிட்டுவர வெள்ளைப்படுதல் நீங்கும். இத்துடன் மூலம், கிரந்து, சிரங்கு நீங்கும்.
6. ஆவாரம்
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
இதன் சம்மூலத்தினை (அதாவது முழுச்செடி) இடித்துப்பொடி செய்து தேனுடன் கலந்து சுண்டைக்காய் அளவு காலையில் மட்டும் சாப்பிட்டுவர உட்சூடு, சுரம், வெள்ளைப்படுதல், மூத்திர ரோகங்கள் போன்றவை தீரும்.
7. அருகம் புல்
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
“பெரும்பாடு தீர்க்கும் அருகம்புல்” என்கின்ற பழமொழிக்கு ஏற்ப அருகம்புல் சாறு அருந்திவர பெரும்போக்கு நின்று, தேக திடகாத்திரம் உண்டாகும்.
8. பற்பாடகம்
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
இதன் சம்மூலத்தினை பறித்து நிழலில் உலர்த்தி, தேவையானபோது வெயிலில் உலர்த்தி இடித்துப் பொடி செய்து தேனில் கலந்து ஒரு சிறு நெல்லிக்காய் அளவு பசும்பாலில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர பித்தம், காச சுரம், உள்மாந்தம், சீதவாத சுரம், கபம், ஆஸ்துமா போன்றவைகள் தீரும். வெள்ளைப்படுதல் முற்றிலும் நீங்கும்.
9. வால் மிளகு
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
முதிராத உலர்ந்த காய் பயன்படுகின்றது. கார்ப்பு, வெப்பம் உண்டாக்கும். சிறு நீர் பெருக்கும், கோழையகற்றும், இத்துடன் வெள்ளைப்பாடு போக்கும்.
வால்மிளகுத்தூளை வெடியுப்புவுடன் சமமாக கலந்து கொடுக்க வெள்ளைப்படுதல் தீரும்
வால்மிளகு, அதிமதுரம், திப்பிலி, சிற்றரத்தை, கடுக்காய் இவைகளின் சூரணத்தினை சம எடை எடுத்து 15 மடங்கு நீர் விட்டு காய்ச்சி ¼ பாகமாய் குறுக்கி, வேளைக்கு 10 மி.லி 4 வேளை கொடுக்க அனைத்துவித இருமல், இழுப்புநோய் தீரும். நாட்பட்ட வெள்ளை, வெட்டை அகலும்.
10. கற்றாழை லேகியம்
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
கற்றாழை சோற்றினை ஏழு முறை நன்றாகக் கழுவி, 75 கிராம் எடுத்துக்கொள்ளவும். அதனுடன் சுக்கு, மிளகு, திப்பிலி வகைக்கு 10 கிராம் எடுத்துக்கொண்டு, கற்கண்டு ¼ கிலோ வாங்கிக்கொண்டு, சோற்றுக்கற்றாழையை கல்வத்தில் இட்டு மைபோல அரைத்து மேற்படிச்சரக்குகளை சிறிது சிறிதாக சேர்த்து அரைத்து, 100 கிராம் பசு நெய் சேர்த்து அரைத்து பத்திரப்படுத்தவும். இதனை தினமும் 5 கிராம் அளவு பசும் பாலில் உண்டுவர, தேகச்சூடு, வெள்ளைப்பாடு தீரும்.

Comments
Post a Comment