வீச்சுப்பரோட்டா

🏵 வீச்சுப்பரோட்டா

தேவையான பொருட்கள்

மைதா மாவு - 1 கிலோ
பால் - 300 -400 மில்லி
எண்ணெய் - 300 மில்லி
தயிர் - 2 டேபிள்ஸ்பூன்
முட்டை - 2
சீனி - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு.


பால்,முட்டை,தயிர்,உப்பு,சீனி ஒரு பாத்திரத்தில் எடுத்து கொள்ளவும்.

அதனுடன் மாவு 50 மில்லி எண்ணெய் சேர்க்கவும்.

நன்றக கலந்து மாவை பிசைந்து பெரிய உருண்டையாக்கி வைக்கவும்.

ஒரு மணி நேரம் கழித்து சிறு சிறு உருண்டையாக்கி கால் லிட்டர் எண்ணெயை ஒரு பாத்திரத்தில் எடுத்து உருண்டைகள் முழுவதும் போட்டு வைக்கவும். 24 உருண்டை வருமாறு பிரித்து வைக்கவும்.

பின்பு ஒவ்வொரு உருண்டையும் எடுத்து கையால் வீசி பரத்தியோ அல்லது உருட்டு கொண்டு விரித்து வைக்கவும்.

சிறிது எண்ணெய் தேய்த்து மாவு உருண்டையை மடித்து வைக்கவும்.

பின்பு இப்படி சுற்றி வைக்கவும்.கையால் அல்லது சப்பாத்தி கட்டை கொண்டு பரத்தி எடுக்கவும்.
தவாவில் போட்டு இரண்டு புறமும் இலேசாக சிவற எண்ணெய் சிறிது தடவி பரோட்டாவை சுட்டு எடுக்கவும்.பின்பு அதனை கையால் தட்டி வைக்கவும்.

சுவையான பிச்சுப்பூ போன்ற வீச்சுப்பரோட்டா ரெடி.இதனை,சால்னா,குழம்பு,குருமா,கிரேவி வகைகளுடன் பரிமாறலாம்.

குறிப்பு

முட்டை விரும்பாதவர்கள் சேர்க்காமலும் செய்யலாம்.எண்ணெயில் போட்டு பின்பு மாவு உருண்டையை பரத்தி வீசுவதால் நன்கு இழுவை கிடைத்து பரோட்டா அடுக்காக வரும்.அதே எண்ணெயை பரோட்டா வேகும் பொழுது சேர்ப்பதற்கும் பயன்படுத்த வேண்டும்.கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் சாப்பிடுவதை தவிர்க்கவும்.எப்பவாவது இப்படி செய்து சாப்பிடும் பொழுது மிகவும் ஆர்வமாக இருக்கும்.

Comments

Popular posts from this blog

கோயம்புத்தூர் சிக்கன் சுக்கா

Increase Instagram Followers Best App