பால் ரவா உருண்டை
பால் ரவா உருண்டை
தேவையான பொருட்கள்:
ரவை – ஒரு கப்
பால் – 2 கப்
ஏலக்காய் – 2
சர்க்கரை – அரை கப்
நெய் – 2 தேக்கரண்டி
செய்முறை:
தேவையானவற்றைத் தயாராக எடுத்து வைக்கவும்.
ஏலக்காயைப் பொடித்து வைக்கவும்.
வாணலியில் ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றி, ரவையை வறுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி சுண்ட காய்ச்சவும். பால் கொதித்த பிறகு அதில் சர்க்கரையைச் சேர்த்துக் கரையவிடவும்.
அதனுடன் வறுத்த ரவை மற்றும் மீதமுள்ள நெய்யைச் சேர்த்து வேகவிடவும்.
ரவை நன்றாக வெந்த பிறகு பொடித்த ஏலக்காய் தூவி கிளறி இறக்கி, சிறிது நேரம் ஆறவிடவும்.
கலவை ஆறியதும் சிறு உருண்டைகளாகப் பிடித்து வைக்கவும்.
சுவையான பால் ரவா உருண்டை ரெடி.

Comments
Post a Comment