புளி சாதம்
புளி சாதம்
தேவையான பொருட்கள்
அரிசி – 1 கப்
o புளி – பெரிய எலுமிச்சம் பழம் அளவு
o காய்ந்த மிளகாய் – 6
o பச்சை மிளகாய் – 4
o பெருங்காயம் – ஒரு சிட்டிகை
o சிறிய வெங்காயம் உரித்தது – 10
o எண்ணெய் – 3 1 /2 மேசைக்கரண்டி
o வறுத்த வேர்க்கடலை – 1 மேசைக்கரண்டி
o எள் – 1 மேசைக்கரண்டி
எண்ணெயில் வறுத்து பொடியாக்கவும்
o காய்ந்த மிளகாய் – 8
o மல்லி – 1 1 /2 தேக்கரண்டி
o உளுத்தம்பருப்பு – 3 /4 தேக்கரண்டி
o கடலைப்பருப்பு – 1 தேக்கரண்டி
o வெந்தயம் – 1 சிட்டிகை
o மிளகு – 1 /4 தேக்கரண்டி (விரும்பினால்)
மேலே சொன்ன பொருட்களை 1 /2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு வறுத்து பொடியாக்கிக் கொள்ளவும்.
தாளிக்க
o கடுகு – 1 /2 தேக்கரண்டி
o உளுத்தம்பருப்பு – 1 தேக்கரண்டி
o கடலைப்பருப்பு – 1 தேக்கரண்டி
o உடைத்த முந்திரிபருப்பு – 1 மேசைக்கரண்டி
o கருவேப்பிலை – சிறிது
செய்முறை
1. அரிசியை உதிரியாக வேக வைத்து ஒரு தட்டில் பரப்பி நன்றாக ஆற விடவும்.
2. புளியை இரண்டு அல்லது மூன்று கப் தண்ணீரில் ஊற வைத்து பின் சாறு எடுத்து வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ளவும்.
3. எள்ளை வெறும் வாணலியில் வறுத்து பொடி செய்யவும்.
4. வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டுச் சூடாக்கி பெருங்காயத்தைச் சேர்த்து பின் காய்ந்த மிளகாயை முழுசாகவே சேர்க்கவும்.
5. மிளகாய் கருப்பாக வதங்கியதும் புளிச்சாற்றை ஊற்றவும்.
6. புளிச்சாறு அளவில் குறைந்து கெட்டியாகும் வரை கலக்கி விட்டுக் கொண்டேயிருக்கவும். இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து, அடுப்பில் இருந்து இறக்கி விடவும்.
7. ஆற வைத்த சாதத்தோடு, தேவையான அளவு கெட்டியாக்கிய புளிச்சாறு சேர்த்து, தாளிக்க வேண்டிய பொருட்களை எண்ணையில் வறுத்து இதன் மீது ஊற்றவும்.
8. தேவையான உப்பு, வறுத்துப் பொடித்த மிளகாய்ப் பொடி சேர்த்து கலக்கி பரிமாறவும்.
விருப்பப்பட்டால் கருவேப்பிலை, வதக்கிய சிறிய வெங்காயம்,வறுத்த வேர்க்கடலை சேர்த்துக் கொள்ளலாம்.
குறிப்பு; அரிசியுடன் சிறிது எண்ணெய் அல்லது நெய் சேர்த்து வேகவைத்தால் சாதம் உதிரியாக இருக்கும்.
சிறப்பு; புளிசாதம் 2-3 நாட்களுக்கு கெடாமல் இருக்கும்.

Comments
Post a Comment