தூத்துகுடி ஸ்டைல் மீன் குழம்பு

தூத்துகுடி ஸ்டைல் மீன் குழம்பு

தேவையானவை:

மீன் - 500 கிராம்
வெங்காயம் - 2 மீடியம் சைஸ்
தக்காளி - 1 மீடியம் சைஸ்T
கறிவேப்பிலை - கொஞ்சம்
மிளகாய் பொடி - 1 1/2 டீஸ்பூன்
மஞ்சள் பொடி - 1/2 டீஸ்பூன்
மல்லி பொடி - 2 டீஸ்பூன்
தேங்காய் துண்டுகள் - 3 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1 1/2 டீஸ்பூன்
புளி - நெல்லிக்காய் அளவு
பச்சை மிளகாய் – 1 கீறியது
உப்பு தேவையான அளவு
எண்ணைய் – 1 ½ டேபிள் ஸ்பூன்

செய்முறை:

மீனை கழுவி தேவையான அளவில் துண்டுகளாக்கி கொள்ளவும்.

ஒரு ஸ்பூன் மிளகாய் பொடி, ஒரு டீஸ்பூன் மல்லி பொடி, 1/4 டீஸ்பூன் மஞ்சள், தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு பாத்திரத்தில் இட்டு நன்றாக கலக்கி மீனை அதிலிட்டு இருபது நிமிடங்கள் ஊற வைக்கவும்.

புளியை கரைத்துக் கொள்ளவும்

ஒரு வெங்காயத்தை மெலிதாக அரிந்து கொள்ளவும். மீதியுள்ள வெங்காயத்தையும், தக்காளியையும் பெரிதாக அரிந்து கொள்ளவும்.

தேங்காய், சீரகம் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும். இத்துடன் கொஞ்சம் பெரிதாக அரிந்த வெங்காயம், தக்காளி சேர்த்து நைசாக இல்லாமல் கொறகொறப்பாக அரைக்கவும்.

ஒரு கடாய் அல்லது மண்சட்டியில் எண்ணெய் ஊற்றி மெலிதாக அரிந்த வெங்காயம் போட்டு வதக்கி, மீதமுள்ள மிளகாய், மல்லி, மஞ்சள் பொடிகளை சேர்த்து புளித்தண்ணியை ஊற்றி நன்றாக கலக்கவும்.

வாணலி/மண்சட்டியை அடுப்பில் வைத்து மூடியிட்டு கொதிக்க வைக்கவும்.

5 நிமிடங்கள் கழித்து மீனை ஒவ்வொன்றாக சேர்த்து மூடியிட்டு மீன் பாதியளவு வேகவைக்கவும்.

இப்பொழுது தக்காளி சேர்த்து வேகவிடவும்.
மேலாக எண்ணெய் ஊற்றி மீன் வேகும் வரை காத்திருக்கவும்.

மூடியை திறந்து சிறிய தீயில் எண்ணெய் மேலே மிதந்து வரும்வரை குழம்பு பாதி திக்காக வரும் வேக வைக்கவும்.

இறுதியில் மல்லி இழை இட்டு பறிமாறவும்.

இந்த மீன்குழம்பு சோற்றிற்க்கும், தோசைக்கும் ஏற்றது.

🥗அம்மா சமையல் 🥗

Comments

Popular posts from this blog

கோயம்புத்தூர் சிக்கன் சுக்கா

Increase Instagram Followers Best App